|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | ஆரிருள் மறையா 31
அரும்பொறி வையத்துக் கரந்தகத்
தொடுங்கி எம்மைக்
கொண்டுவந் தேமஞ்
சார்த்தி வெம்மை
வேட்டுவர் வியன்மலை
வரைப்பின்
கோற்றொழிற் கருமம் ஆற்றுளி முடித்துச்
35 சிலபகல் கழிந்த பின்
வருவனீர்சென்று
நலமிகு வேந்தனை நண்ணுமின்
விரைந்தென்(று)
ஒழிந்தனன் உதயண யூகி
பின்னென
மொழிந்தனள் அடககி
| | 30 - 38; ஆரிருள்,,.,
,,,,அடகக
| | (பொழிப்புரை) இருளினூடே மறைந்து
பொறித்தேரின்கண் புகுந்து அதனகத்தே ஒடுங்கி என்னையும் தன்னோடு
அழைத்துவந்து பாதுகாவலான இடத்திலே இருக்கச் செய்து, யான் இனி
வேட்டுவர்க்குரிய குறிஞ்சி நிலத்திலே நமது இறைத்தொழிற் பொருட்டு இயற்ற
வேண்டிய செயல்கள் சிலவுள. அவற்றை ஆற்றி முடித்த பின்னர் வருவேன்;
நீயிர் முன்னர் விரைந்து சென்று நம் வேந்தனை எய்துமின் ! என்று எமக்குக்
கூறிப் போயினன் என்று உறியவள் ஏனையவற்றைக் கூறாமல் தன்னுள்ளே
அடக்கி வைத்து என்க
| | (விளக்கம்) 30.
ஆர் இருள் - செல்லுதற்கரிய இருள் ; நிறைந்த இருளுமாம். மறையாக
எனக்கொண்டு இருளே மறைக்கும் பொருளாக எனினுமாம்
31.. பிறராற் செய்தற்கரிய பொறியையுடைய தேர்
என்க. 31, தவமூதாட்டியாகலின் எம்மை என்றாள்.
32, ஏமம் - காப்பிடம். சார்த்தி - சாரச்
செய்து. 33 - 34 வெவ்விய பண்புடைய வேட்டுவர் வாழும் அகன்ற
குறிஞ்சி நிலத்திலே யான் நம் உதயணனுடைய இறைத் தொழிலுக்குச்
செய்யவேண்டிய சில கருமம் என்க, ஆற்றுளி - நெறிப்படி.
36, நலமிகு வேந்தன் ; உதயணன். 37. ஒழிந்தனன் என்பது
இறந்தொழிந்தான் என்றும் போயினான் என்றும் இரு பொருளும்பட நின்றமை
உணர்க. உதயண ; அண்மைவிளி யூகி; எழுவாய், யூகி மறைந்து சார்த்தி்
நண்ணுமின் என்று கூறி - ஒழிந்தனன் என முடிக்க. அடக்கி -
இனித் தான் நிகழ்த்தவேண்டிய செயல்களைத் தன்னுள்ளே மறைத்து
என்க.
|
|