|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | பெருமகன் தானெனப் பெற்றியிற் பிழையான்
யாப்பமை காதலோ டாருயிர்
அன்ன கோப்பெருந்
தேவிக்கு நீப்பிடம்
உணர்த்தித் 55 தந்தையுரை காட்ட
உய்ந்தது முதலா
இன்பக் கட்டுரை பைந்தொடி
கேட்ப முறைமையின்
விரிபப
| | 52 -57. பெருமகன்,,,,,,,,,,.,,விரிபப
| | (பொழிப்புரை) 52- 57 ; தான்
பெருமகன் எண்னும் அந்தத் தன்மையினின்றும் நின் தந்தை பிறழாதவனாய்க்
கட்டமைந்த காதலோடே தனது உயிர்போன்ற கோப்பெருந் தேவிக்கு நீ அவரை
நீத்தெய்திய இடத்தின் சிறப்பை உணர்த்திக் கூறுதலானே அவள்
உயிர்விடாமல் உய்ந்தாள் என்பது முதலாகவுள்ள இன்பத்திற்குக் காரணமான
மொழிகளை வாசவதத்தை கேட்கும்படி பட்டமுறைமயாலே விரித்துக் கூற
என்க.
| | (விளக்கம்) 52. பெருமக்கள் மெய்த்திருவந் துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளம் உடையராவர் என்பதற்கிணங்க,நின்தந்தை உள்ளம்
பிறழாதவனாயினன் என்பது கருத்துதான் பெருமகன் என் அப்பெற்றியில்
பிழையான் என மாறுக. 53. யாப்பமை காதல் -
பலபிறப்புக்களினும் பொருந்தி அடிப்பட்டு வரும் உழுவலன்பு.
கோப்பெருந்தேவி - வாசவதத்தையின் தாய். தேவிக்கு உரைகாட்ட அவள்
உய்ந்தாள் என்று அவள் உய்ந்தது முதலாகவுள்ள கட்டுரை விரிப்ப என
விரித்தோதுக. 57. முறைமை - நிகழ்ந்த
முறைமை,
|
|