|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 10 . யூகிக்கு விலாவித்தது |  |  |  | நீலப் பொய்கைப் பாசடைத் 
      தாமரை கதிர்வாய் 
      திறந்து,,,,,,, ,,. ,,,, 
      ,
 பகுவாய்க் 
      கிண்கிணி பரட்டுமிசை ஆர்ப்பக்
 70    
      கோடுவாய் சிலம்பி்ற் கொழுஞ்சிகைக் 
      குன்றின்
 பாடமை 
      படுகால் பைய 
      ஏறி
 நங்காய் 
      காணுன் பெருமா 
      னன்னகர்
 உந்தத் 
      திசையதென் றொன்றப் 
      பிறவும்
 உகப்பக்  கூறி மிகப்பல வருட்டி
 |  |  |  | 67 - 74; 
      நீலப்பொய்கை........வருட்டி |  |  |  | (பொழிப்புரை)  மேலும் அவள் 
      துன்பத்தை அகற்றுதற்பொருட்டு 'நங்காய்! நின்காற் கிண்கிணி 
      ஒலிக்கும்படி இச்செய்குன்றின் மேற் சாத்தப்பட்ட ஏணியின் மிசை மெல்ல 
      ஏறி நோக்குதி; உந்தத் திசையிற் றோன்றுவதுதான் நின் தந்தையின் நல்ல 
      உச்சைனி நகரமாகும் என்னும் இன்னோரன்ன பிறவும் அவள் மகிழும்படி மிகவும் 
      பலவாகிய மொழி களையும் கூறித் தன்வயப்படுத்திப் பின்னர் 
  என்க. |  |  |  | (விளக்கம்)  67-68. 
      இவ்வடிக்கு முடிக்குஞ் சொல் சிதைந்தது போலும். நீலநிறமுடைய நீர்மிக்க 
      வாவியிடத்துள்ள பசிய இலைகளோடு கூடிய தாமரை மலரினது ஒளியுடைய வாயைத் 
      திறந்து என்க. இது (72) நன்னகர்க்கு அடையாகும் 
      போலும். 69, பகுவாய் - பிளவுபட்டவாய். கிண்கிணி-சதங்கை, 
      பரடுகாலில் ஓருறுப்பு.
 70-71, குவடு வாய்க்கப்பெற்ற இயற்கை மலையை 
      ஒத்த கொழுவிய குவட்டி னையுடைய இச்செயற்கை மலையின்மேல் சார்த்திய 
      படியமைந்த ஏணியில் மெல்ல ஏறி என்க. கோடு-குவடு; சிகரம்,சிலம்பு - மலை. 
      சிகை - முடி; சிகரம். குன்றென்றது செய்குன்றினை. பைய-மெல்ல. 
      படுகால்-ஏணி.
 72. நங்காய் - வாசவதத்தையே!
      உன்பெருமான் - உன்தந்தை. நகர் - உச்சைனி. இஃதிடமணித்தென்று 
      ஆற்றியவாறு.
 73. உந்த;சுட்டு. திசையிலே தோன்றுவது என்க, 
      ஒன்ற
- அவள் மனம் தன்மொழியோடு பொருந்தும்படி இன்னோரன்ன பிறவும் 
      என்க,
 74. வருட்.டி-வயப்படுத்து, பின்னர் என ஒருசொல் 
    பெய்க
 | 
 |