உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
10 . யூகிக்கு விலாவித்தது |
|
75 உலகியல் வழாஅ
உருமண் ணுவாவொடு
வலிகெழு நோன்றாள் வயந்தகற்
குறுகி நட்டோன்
துணிந்த கட்டழற்
கருமம் மந்தண மாக
அந்தணி உரைத்தலும்
|
|
75-78 ; உலகியல்,
..,...உரைத்தலும்
|
|
(பொழிப்புரை) அப் பாரபபன
மகளாகிய சாஙகியத்தாய் அவளினின்றும் நீங்கி உருமண்ணுவாவையும்
வயந்தகனையும் எய்தி யூகி இனிச் செய்யவேண்டியதாக ஆராய்ந்து துணிந்த
தீக்கொளுவும் செயலைப் பிறர் அறியாதபடி மறைவாக வுணர்த்தா நிற்ப
என்க,
|
|
(விளக்கம்) 75. உலகியலினின்றும் வழுவாத உருமண்ணுவா என்க.
76. வலிமை பொருந்திய தாளையுடைய வயந்தகன்
என்க.நோன்றாள் - இயல்படைச்சொல்.
77.நட்டோன் - யூகி. துணிந்த-ஆராய்ந்து தெளிந்த. அழற்கருமம் என்றது,
உதயணனிருக்கும் அரண்மனையில் தீக்கொளுவி வாசவதத்தையைப் பிரிக்குஞ்
செயலை. 78.. மந்தணம் - மறைவு. அந்தணி-பார்ப்பனி;
சாங்கியத்தாய்.
|