உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
10 . யூகிக்கு விலாவித்தது |
|
விருத்தி அமைத்த வினைமுடி
பாவைக் கருத்துமெய்
தெரிதல் காவலன்
கடனெனத் தேவியோ
டிருந்த செவ்விக் கோட்டியுள் 95 ஓவியப்
பாவை உய்த்தவள்
காட்ட நுண்ணுணர்
மன்னன் தன்னொப்
பாகிய கண்ணுளர்
நுட்பத்துக் கருத்து நோக்கி
|
|
92-97;
விருத்தி......நோக்கி
|
|
(பொழிப்புரை) அசசாங்கியத்தாயும். நுண்மாணுழை புலனுடைய உதயண குமரன் வாசவதத்தையோ
டிருந்தொரு செவ்வியில் அவ்வோவியத்தை அவன்பாற் கொடுத்துக்
கருத்துவிரிதற்கிடனாக இயற்றப்பட்ட தொழில் முற்றுப்பெற்ற
இவ்வோவியத்தின் மெய்க்கருத்தினை உணர்தல் மன்னன் கடமையேயாகும் என்று
கூற, அதுபெற்ற (108) உதயணன் அவ்வோவிய உருவத்தை ஓவியப்புலவர் அங்ஙனம்
வரைதற்குக் காரணமான அவரது நுண்மையுடைய கருத்தினை ஆராய்ந்து
என்க.
|
|
(விளக்கம்) 92. விருத்தி அமைத்த
- அதனைக் காண்போர் இதன் கருத்தியாதென ஆராய்வதாகிய
விருத்தித்தொழிலிற்கு இடனாயமைத்த என்க, 93, காவலன் ;
முன்னிலைப் புறமொழி. 94. செவ்வியையுடைய கோட்டி என்க.
கோட்டி-கூட்டம் 96, ஓவியப்பாவை - ஓவியப்படம்;
ஆகுபெயர், 96-97, தன்னைஒத்த ஒவியப்புலவர் என்க
.உதயணன்தானே ஓவியப் புலமையிற் சிறந்தோன் ஆதலின் தன்ஒப்பாகிய
கண்ணுளர் என்றார். 'நோக்கினார் கண்களிடத்தே தம் தொழிலை,
நிறுத்துதலால் இவர் இப்பெயர் பெற்றார்' என்பர் நச்சினார்க்கினியர்
(மதுரைக், 517 உரை.)
|