|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 10 . யூகிக்கு விலாவித்தது |  |  |  | உதயணன் மாழாந் துயிர்வாழ் 
      வொழிகெனச் சிதர்பொறி எந்திரம் போலச் சிதர்ந்து
 110    தாரும் பூணு மார்பிடைத் 
      துயல்வரச்
 சோருங் 
      கண்ணினன் துளங்கிமெய்ம் மறப்ப
 |  |  |  | 108 - 111; 
      உதயணன்.,,,,,,நோக்கி |  |  |  | (பொழிப்புரை)  அவ்வுதயணன் மயங்கிக் 'கெடுக என் ஆயுள்' என்று மார்பிலணிந்த 
      மலர்மாலைகளும் அணிகலன்களும்மார்பிற்கிடந்து புரளா நிற்ப, நீர்சோருங் 
      கண்ணையுடையனாய்ச் சிதர்ந்துபோன இயந்திரம் போலப் பொறிகள் 
      சிதர்ந்துபோக நடுங்கி வீழ்ந்து மூர்ச்சையடைய என்க. |  |  |  | (விளக்கம்)  108. மாழாந்து 
      - மயங்கி ,என் உயிரினது வாழ்க்கை ஒழிவதாக என்று கூறி 
      என்க. 109. பொறி-மெய்வாய் முதலிய பொறிகள்; விசைகெட்ட 
      எந்திரம் எனினுமாம், சிதர்ந்து - சிதைந்து,
 110, தார்-மாலை, பூண்-அணிகலன்.
 111. துளங்கி -நடுங்கி. 
      மெய்ம்மறப்ப -மூர்ச்சையடைய.
 | 
 |