உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
10 . யூகிக்கு விலாவித்தது |
|
அவல உயிர்ப்பிணி அடியற
எறியும் 120 தவலருஞ் சாந்தந் தடியற
அப்பிச் சீதச்
செய்கையின் மாதுயர் விடுப்பத் தீதில்
பெருமகன் தெலிவுமுந் துறீஇக் காதலிற் கவலைப்
பாசந் தட்பத் தண்டா மரைக்கண் வெம்பனி
வீழ
|
|
119- 124;
அவல.........வெம்பனிவீழ
|
|
(பொழிப்புரை) ஆண்டுள்ளார்
துன்பமாகிய உயிர்ப்பிணியைத் துவரப்போக்கும் சந்தன முதலியவற்றை
அவர்தம் உடம்பிலே நன்கு தடவுதல் முதலிய குளிர்ச்சி செய்யும் செயல்களைச்
செய்தலானே அப்பெருந்துன்பம் சிறிது தணியா நிற்ப உதயணன்
ஒரோவழித் தெளிந்து, காதலால உண்டான கவலை என்னும் தளை
தன்னைக்கட்டுதலானே தனது தாமரைமலரை ஒத்த கண்ணினின்றும் வெவ்விய
கண்ணீர் வீழாநிற்ப என்க
|
|
(விளக்கம்) 119 அவலம்
- துன்பத்தின் நான்கு நிலையினுன்ஒன்று; உயிரைப்பற்றும் நோய் என்க.
அடிஅற-முதலின்றிக்கெட 120. தவல் - குற்றம்.
தடி-தசை; உடம்புக்கு ஆகுபெயர். அப்பி-தடவி. சீதச்செய்கை-குளிரூட்டுஞ்
செயல், 122 பெருமகன் உதயணகுமரன். தெளிவு முந்துறீஇ-தெளிவு
முந்தப்பெற்று. 123. காதலின் - அன்பினாலே,
''அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் , பூசல் தரும்''
என்றார் தேவரும், தாமரை; ஆகுபெயர். துன்பக்கண்ணீர் ஆகலின்
வெம்பனி என்றார்.
|