| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 10 . யூகிக்கு விலாவித்தது | 
|  | 
| 125   விண்தோய் கானத்து வேழ 
      வேட்டத்துச்
 சிறைகொளப் பட்டியான் 
      செல்சார் வறுத்தபின்
 மறைகொண் 
      மாயமொடு துறைநகர் விழவினுள்
 ஏதின் 
      மன்னன் காதலி பயந்த
 மாதரைத் தழீஇப் 
      போதரப் புணர்த்துப்
 130  போதுவல் என்றோய் பொய்த்தனை 
      யோவெனக்
 காதல் தோழனைக் காணாது 
       கலங்கி
 | 
|  | 
| 125 - 131 .. 
      விண்டோய்.,.........கலங்கி | 
|  | 
| (பொழிப்புரை)  வானுற 
      வளர்ந்த காட்டின்கண் யான் பகைவனாலே சிறையாகப் பற்றப்பட்டுப் 
      புகலிடம் அற்ற பின்னர், மறைவான வஞ்சகச் செயலாலே உச்சைனி நகரத்தில் 
      மாந்தர் கொண்டாடிய  நீராட்டு விழாவிலே அம்மன்னன் மகளாகிய 
      வாசவத்தையைக் கைப்பற்றிப் புறப்பட்டு வரும்படி செய்து நின் பின்னர் 
      யானும் வருவேன் என்று எனக்குக் கூறினை, அக்கூற்றினைப் பொய்யாக்கினையோ 
      என்று வாய்விட்டுப் புலம்பித் தன் தோழனைக் காணப் பெறாமையானே 
      கலக்கமடை.ந்து என்க. | 
|  | 
| (விளக்கம்)  125. 
      வேழவேட்டம்-யானை வேட்டை, 126. செல்சார்வு - 
      புகலிடம்.
 127, மறைவினைக்கொண்ட வஞ்சகச் செயல் 
      என்க,நகர்துறை விழவினுள் என மாறுக. நகர் - உச்சைனி, துறை விழவு - நீராட்டுவிழா.
 128. ஏதின் மன்னன் - அயன்மையுடைய பிரச்சோதன 
      மன்னன். கோப்பெருந்தேவி பயந்த என்பான், மன்னன் காதலி பயந்த 
      என்றான்.
 129. மாதரை ; வாசவதத்தையை என்றாய் 
      அம்மொழியைப் பொய்யாக்கினையோ
      என்க.
 131. 
      காதற்றோழன் ; யூகி.
 |