உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
         நிழற்பொலி காவின் நிரந்துடன் ஆடிக்
    140   குழற்சிகை அவிழக் குண்டுநீர் யமுனைக்
         கணைக்கடு நீத்திடைப் புணைப்புறந் தழீஇ
         விளையாட்டு விரும்பி அளையின வாகிய 
         இன்சுவை அடிசில் உண்பதும் ஒரீஇ
         மன்பெருங் கோயிலுள் வளர்ந்த காலை
    145   வேக நம்பிக்கு விலக்குக அடிசிலென்(று)
         ஆகுபொருள் அறிவி அரும்பொருள் என்மகன்
         யூகந் தராயன் உண்கென உண்ணாய்
         குடிப்பெருந் தேவி அடிக்கலம் பற்றி
         அருளினுங் காயினும் ஒப்ப தல்லதை
    150   பொருளஃ தன்று புரவலன் மாட்டென்
         றென்செய் குற்றம் நின்கண் தாங்கி
         அன்பளி சிறப்பித் தின்பதம் இயற்றல்
         இளமைக் காலத்தும் இயல்போ உடையோய்
 
        139-153; நிழற்பொலி..........உடையோய்
 
(பொழிப்புரை) யாம் விக்கிரமன்னன் அரண்மனையின்கண் வளர்ந்து வந்த அவ்விளமைக் காலத்தே விளையாட்டினைப் பெரிதும் விரும்பி உணவுகொள்ளாத குற்றத்தின் பொருட்டு நந்தாய் ' நம்பிக்கு உணவிடுதல் வேண்டா ! பெறற்கருஞ் செல்வம் போன்ற என் மகனான யூகிமட்டும் உண்க' என்று கூறினளாக;அப்பொழுது அக்கோப்பெருந் தேவியின் அடிகளைப்பற்றிக்கொண்டு ' தாயீர்! நீயிர் எம்பாற் குணங்கண்டு போற்றுவீர் ஆயினும், அன்றிக் குற்றங்கண்டு வெகுள்வீர ஆயினும், இருவழியும் எம்மிருவர்பாலும் ஒப்பச் செல்வதல்லது இங்ஙணம் எம்மில் ஒருவரை உவத்தாலும ஒருவரை உவர்த்தலும் தகுதியன்று. அவர் செய்குற்றம் என்குற்றமே' என்று கூறி, என் குற்றத்தை நின்னதாக்கிக் கொண்டு அன்புடைமையாலே அவளது அருளைச் சிறப்பித்து எனக்கு இன்பம் உண்டாகும் செவ்வியை உண்டாக்குதல் அவ வினம் பருவத்திலேயே இயல்பாக உடையை என்க
 
(விளக்கம்) 139. நிழலாலே பொலிவுற்ற கா என்க. கா-பூம்பொழில். நிரந்து-கூடி,
     140 குழற்சிகை-குழலாகக் கட்டிய குடுமி. அவிழ-அவிழும்படி, குண்டுநீர்-ஆழ்ந்த நீர். யமுனை- ஓர்யாறு
     141. கணைக்கடு நீத்து -அம்புபோல விரைந்தொழுகும் வெள்ளம். புணை-தெப்பம். ழீஇ-தழுவி.
     141-142 தயிரையுடையனவாகிய இனிய கவையுடைய உணவு,
     143, ஒரீஇ-விடுத்து
     144 மன் - ஈண்டு உதயணன் மாமனாகிய விக்கிரமன்னன். வேகம்பி-சினமிக்க உதயணன், தாய்சினந்துழித் தானுஞ் சிவத்தலால் வேகநம்பி  என்றபடியாம்.
     145. ஆகுபொருள் அறிவி என்றது தன் தாயாகிய மிருகாபதியை - மிருகாபதி உதயணனுக்கும் யூகிக்கும் வேற்றுமை கருதாதவள். ஆகலின் யூகியை என்மகன் என்றாள் என்பது கருத்து.
     147. யூகந்தராயன்-யூகி.
     148., அடிக்கலம்- அடியின்கண் அணியும். அணிகலன். எம்பாற் குற்றம் காண்பீரேனும் அல்லது குணங்காண்பீரேனும் அவை இருவர்க்கும் பொதுவாமன்றி ஒருவர்க்கே உரியவாகா ஆகலின் யான் குணமுடையேனாகவும் உதயணன் குற்ற  முடையனாகவும் தாங்கள் கொள்வது தகுதியன்று. அக்குற்றம் புரவலன்மாட்டுமட்டுமே உளதன்று என்மாட்டும் உள்ளதே யாரும் என்று என் குற்றத்தை நின்மேலதாகவும் கொண்டு அன்பானும் அளியானும் என்னைச் சிறப்பிக்கும் தன்மையுடையோய் என்றவாறு
     152. இன்பதம்-இனிய செவ்விகள்.