|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 10 . யூகிக்கு விலாவித்தது |  |  |  | முதுமைக் காலத்து மதலையின் தாங்கிப் 155   
      பின்போக் குரிய பெருந்தகை 
      யாள
 முன்போக்கு 
      விரும்புதன் மூர்க்கர 
      தியல்பெனக்
 கேட்டோர் 
      உருக மீட்டுமீட் டரற்ற்
 |  |  |  | 154 - 157; 
      முதுமை...,.,.......அரற்ற் |  |  |  | (பொழிப்புரை)  இனி 
      அவ்விளம்பருவத்தேயன்றி அகவைமுதிர்ந்த காலத்தும், எனக்குத் தாழ்வு 
      வரும்போதெல்லாம் தூண்போலத் தாங்கி என் பின்னரே வரும் உரிமையை உடைய 
      பெருந்தகுதியுடையோய்! அவ்வுரிமை கருதாமல் என்னைத் தனியே விடுத்து 
      முன்னர்ச் செல்லுதல் நின்னியல் பிற்கு ஒத்ததன்று. அங்ஙனம் செல்லுதல் 
      மூர்க்கர்க்குரிய இயல்பே ஆகும், என்று இன்னோரன்ன பலவும் கேட்டோர் 
      பெரிதும் உளம் உருகும்படி மீட்டும் மீட்டும் கூறிப் புலம்பாநிற்ப 
      என்க. |  |  |  | (விளக்கம்)  முதுமைக்  
      காலம் - இனிவரும் முதுமைப் பருவத்தும் என்க. மதலை - தூண்; நன்மகவுமாம், 156. முன்போக்கு- முன்னர் இறந்துபோதல், மூர்க்கர்-கயவர்,
 157. அரற்ற - புலம்பா நிற்ப.
 | 
 |