|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 11. அவலந் தீர்ந்தது | | எமுற
வொழியா ஏயர் மன்னனை
உடுத்துவழி வந்த உழுவல் அன்பின் 40
வடுத்தீர் கைவினை வாசவ தத்தையொ(டு)
ஒருப்படுத் தொழியா தோங்குமலை
மருங்கிற் கடிகமழ்
கானங் காணக் காட்டிப்
| | 38 - 42 ; ஏமுறவு,,.,,,,,,,காட்டி
| | (பொழிப்புரை) மயக்க மொழியாத
அவ்வுதயணகுமரனை உழுவலன்புடைய வாசவதத்தையோடே கூடிவருமாறு வயஞ்செய்து
அழைத்துப்போய் உயர்ந்த மலைச்சாரலிடத்தேயுள்ள மணங்கமழும்
பூம்பொழில்களை விரும்பிக் காணும்படி செய்து பின்னர் அக்காட்டின்கண் ஓதி
ஞானமுடைய முனிவர் ஒருவர் இருத்தலையும் உணர்த்தி என்க,
| | (விளக்கம்) 38. ஏமுறவு
- மயக்கம், ஏயர்மன்னன் ; உதயணகுமரன். 39, உடுத்து - வயஞ்செய்து.
உழுவலன்பு - எழுமையுந் தொடர்ந்துவரும் அன்பு. 40. வடுத்தீர் - பழியற்ற,
கைவினை - ஒழுக்கம் என்பதுபட நின்றது. 41. ஒருப்படுத்து -
சேர்த்து. 42. கடி - மணம். காணக்காட்டி என்பது
விரும்பிக்காணும்படி செய்தென்றவாறு. 43, படிவப்பள்ளி -
தவவொழுக்கமுடையோர் உறையுமிடம், தீவினையாகிய பெரிய மரத்தை விரகமாகிய
கோடரியாலே வேர் அற்றுப் போகும்படி வெட்டுகின்ற ஒரே குறிக்கோளையுடைய
மிக்க தவத்தையுடையோன் ஒரு துறவி உளனாதலையும் உணர்த்தி என்க, இனிக்
குறிக்கோள் உறுதவன் என்றதற்கு எதிர்காலத்தே நிகழ்வனவற்றை அறிதற்குரிய
குறி கேட்டதற்குரிய தவன் எனினுமாம்,
|
|