|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 11. அவலந் தீர்ந்தது | | பெருமணிப்
பாவையிற் பிறந்தனை
கிடந்தோய் திருமெய்
தழீஇ அருமைத் தாக 75 நிகழ்ந்ததை
அறியாள் கவன்றனள்
இரங்க ஆத்திரை
போந்த அருந்தவன் கண்டுதன்
ஆத்த காதன்மகள் ஆவ தறிந்துசென்(று)
அஞ்சல் ஓம்பென நெஞ்சகம்
புகலப் பள்ளிக் கொண்டுபுக்
குள்ளழி வோம்பி 80 அதிரா ஞாலத் தரசுவீற்
றிருந்த கதையுரைக் கெல்லாங்
காரணன் ஆதலி்ன் புதைஇருள்
அகற்றும் பொங்கொளி மண்டிலம்
உதயம் இவர்தர உதித்தோன் மற்றிவன
| | 73
- 83 ; திருமெய்,,,.,.,கொளீஇ
| | (பொழிப்புரை) அங்ஙனம் பிறந்த
நின்னைக் கண்ட தேவியார் நினது அழகிய மெய்யினை அன்பாலே தழுவிக்கொண்டு
அரிதாக நிகழ்ந்த அந்நிகழ்ச்சியை அறியாதவராய் மனங்கவன்று அழுதனராக;
அப்பொழுது அவ்வழியே யாத்திரை வந்த சேடகமுனிவர்
அத்தேவியாரைக்கண்டு அவர் தம் மகளாராதலையுணர்ந்து அவர்பாற் சென்று
அஞ்சற்க! என்று தேற்றித் தமது நெஞ்சம் விரும்புதலானே அவரை
அழைத்துக்கொண்டு தந் தவப்பள்ளியிலே புகுந்து அவரது துயரத்தைப் போக்கி
நீ பின்னர் நிகழும் நிகழச்சிக்கெல்லாம் காரணனாக இருத்தலைத்தம் ஓதி
ஞானத்தால் உணர்ந்து கொண்டவராய் ஞாயிறு தோன்றியபொழுது
தோன்றினமையாலே இவன் உதயண குமரன் என்று பெயர் பெறுவானாக என்று கருதி
நினக்கு அப்பெயரைச் சூட்டாநிற்ப என்க.
| | (விளக்கம்) 72. தனது
திருமெய்யினிடத்தே தழுவிக்கொண்டெனினுமாம். பறவை தூக்கிப்போதல் அரிய
நிகழ்ச்சியாகலின், அருமைத்தாக நிகழ்ந்ததை என்றார். 74. கவன்றனள் ;
முற்றெச்சம். 75. ஆத்திரை. - யாத்திரை. அருந்தவன் - மிருகாபதியின்
தந்தையாகிய சேடக முனிவர். 76. ஆத்தகாதல் - பிணிப்புற்ற
அன்பு. 77 அஞ்சல்ஓம்பு - அஞ்சுதலை விட்டொழி. கடந்த ஞானியும்
மக்கண்மேல் காதல் கடத்தல் அரிதென்பது தோன்ற நெஞ்சகம் புகல என்றார்.
புகல - விரும்ப. 78, ஞாலத்து அதிரா அரசுவீற்றிருந்த என மாறுக, 80,
கதை - நிகழ்ச்சி, 81, புதையிருள் - பொருள்களை மறைக்கும் இருள்.
ஒளிமண்டிலம் - ஞாயிறு. 83, கொளீஇ - கொடுத்து ;
கொள்ளச்செய்து. இவ்வெச்சத்தைச் செயவெனெச்சமாகத் திரித்துக்
கொள்க.
|
|