உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         உதயணன் ஆகெனப் பெயர்முதற் கொளீஇப்
    85   பரம இருடிகள் பல்லோர்க்குத் தலைவன்
         தருமந் தாங்கிய தவாஅக் கொள்கைப்
         பிரமசுந் தரனெனும் பெரும்பெயர் முனிவற்குப்
         பழிப்பில் கற்பின் பரமசுந் தரியெனும்
         விழுத்தகு பத்தினி விரும்பிப் பெற்ற
    90   புத்திரன் தன்னொடு வத்தவர் தோன்றலும்
         இருவிரும் அவ்விழி மருவிவிளை யாடிச
 
        84 - 91 ; பரமஇருடிகள்,.,.,,.....,...சில்லென்காலை
 
(பொழிப்புரை) அன்று தொட்டுப் பிரமசுந்தரன் என்னும் முனிவர்க்கும் பரமசுந்தரி என்னும் அவர் பத்தினிக்கும் பிறந்த யூகி என்பானொடு தோன்றலே! நீ அருவி முதலியவற்றில் விளையாடி வளராநின்ற அவ்விளம் பருவத்திலே என்க.
 
(விளக்கம்) 84. பரம இருடிகள் - உயர்ந்த முனிவர்கள். தருமம் - துறவறம். தவாஅ - கெடாத.
    88. பத்தினி-ஈண்டு மனைவி என்னும் பொருட்டாய் நின்றது.
    89. புத்திரன் என்றது யூகியை,
    90. புத்திரனும் தோன்றலும் ஆகிய நீவிர் இருவிரும் என்க. 
    91, சில்லென்காலை என்புழிச் சின்மை இளமைப் பண்பு குறித்து நின்றது.