உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         உரைத்தம் முனிவன் உவந்தனன் கொடுத்துப்
         பெறலரும் பேரியாழ் பெற்ற வாறும்
         ஆர்வ நெஞ்சினன் ஆகிய கல்வி்
    105   நேர்தனக் கில்லா நெஞ்சுண் அமைதி
         யூகி நினக்கிங் கடைக்கலம் என்பதும
         தோழன் ஆகித் தோமில் கேள்வி
         யாழும் பாட்டும் அவைதுறை போகிக்
         கல்லா நின்ற சில்லென் காலத்து
 
        103 - 109 ; ஆர்வ.,,,,..,,.,,சில்லென் காலத்து
 
(பொழிப்புரை) பின்னர் அம்முனிவர், நின்பால் ஆர்வமிக்க நெஞ்சுடையவனும் கல்வியில் தன்னை ஒப்பாவாரில்லாதவனும், பிறர் உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளும் இயல்புடையவனும்,  ஆகிய இந்த யூகி நினக்கு அடைக்கலம் என்று தன் மகனாகிய யூகியையும் நின்பால் ஓம்படைசெய்ய அதனை மேற்கொண்டு அவ்வியூகிக்குச் சிறந்த நண்பனாகி, மேலும் குற்றமற்ற நூற்கேள்விகளையும் யாழ்ப் பயிற்சியும். மிடற்றுப்பாடலும் ஆகிய கலைகளையும் அம்முனிவர்பாற் பயின்றுவந்த அவ்விளம் பருவத்திலே என்க.
 
(விளக்கம்) 102. ஆர்வம் - அன்பு காரணமாகப் பிறர் மாட்டுச் செல்லும் விருப்பம்; 'அன்பீனும் ஆர்வமுடைமை 'என்றார் திருவள்ளுவனாரும், கல்வியில் தனக்கு நேர்இல்லாதவன் என்க. நேர் - ஒப்பு. நெஞ்சுஉண் அமைதி - பிறர் உளத்தைக் கவர்ந்துகொள்ளும் இயல்பு,
   106 திசையெல்லாம் பரந்து சென்ற புகழையுடைய பிரமசுந்தர முனிவன்.
   107. தோம்இல்கேள்வி - குற்றமற்ற நூற்கேள்வி. 
   108. யாழ்-யாழ்க்கல்வி. பாட்டு - மிடற்றுப் பாடல்.