|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 11. அவலந் தீர்ந்தது | | அடிகள்
என்னுழைத் தம்மின் இறையென இயற்றித்
தாய மெல்லாந் தனக்குரித் தாக
ஏயர் கொற்றம் இவன்வயிற் கொடுத்துப்
140 பெறலரும் பெருந்தவத் துறுபயன்
கொள்வலென்(று) ஆய்புகழ் முனிவனொடு
தேவியை இரந்து செருமிகு குருசில்தன்
மருமகற் றழீஇ நீல யானை நின்றது
பண்ணிக் கோல எருத்தங் குலவ
ஏற்றி. 145 வளநகர் புக்குத்தன் னுளமனைக்
கெல்லாம் உதயணன் இறையென அறிவரச்
சாற்றி வேத்தவை நடுவண் வீற்றினி
திருத்தி ஏயர் குலமுதற் கிறைவன்
ஆகி அவ்வழி மற்றுநீ வளர
| | 135 - 148 ;
அடிகள்....,,.,,,,....,,.,நீ வளர
| | (பொழிப்புரை) அது கேட்ட
விக்கிரன் 'அடிகேள்! இச்சிறுவனை எனக்கு அருள்க! அங்ஙனம் அருள்வீராயின்
இவனை அரசனாக்கி வைத்துப் பொருள் அனைத்தையும் இவனுக்கு உரிமையாக்கி
ஏயர் குலத்து அரசுரிமையையும் இவன்பாற் கொடுத்துப் பின்னர் அடியேன்
தவமேற் கொண்டு அதன் பயனை எய்திச் சிறப்புறுவேன்' என்று கூறி
அச்சேடக முனிவனையும் மிருகாபதியையும் இரந்து பெற்று அவ் விக்கிரன்
தன் மருகனாகிய நின்னைத் தழுவிக்கொண்டு அங்கு
நின்றதனது நீலயானையைப் பண்ணுறுத்தி அதன்மிசை நின்னை
ஏற்றிக்கொண்டு தனது வளநகரமாகிய வைசாலிக்குச் சென்று தன்
குடிமக்கட்கெல்லாம் இவ்வுதயணனே இன்றுதொட்டு அரசன் ஆவான் என அறிவித்து
அரசவை நடுவண் இனிது இருக்கச் செய்ய இவ்வாற்றான் நீ அவ்வேயர் குலத்து
அரசனாகி இருக்கச் செய்ய இவ்வாற்றான் நீ அவ்வேயர் குலத்து
அரசனாகி அங்கே வளராநிற்ப என்க.
| | (விளக்கம்) 135.
அடிகள்; அண்மைவிளி. 136. என்னுழை - என்பால். தம்மின் ;
முன்னிலைப்பன்மை. 137.தாயம்-உரிமைப்பொருள். 138. கொற்றம்,
ஆகுபெயராய் அரசுரிமையைக் குறித்து நின்றது. 140. ஆய்புகழ் முனிவன் -
பலரும் ஆராய்ந்து நன்றென்றற்குக் காரணமான புகழையுடைய சேடக முனிவன் என்க.
நீத்தார். பெருமையையே நூலோர் சிறந்ததாகத் துணிதலின் ஆய்புகழ்
என்றார். தேவி - கோப்பெருந்தேவியாகிய மிருகாபதி, 141.
போரின்கண் மிகும் தலைமைத் தன்னையுடைய அவ்விக்கிரமன்னன் என்க.
141. மருமகன் - உடன்பிறந்தாள் மகன். 142 .நீலயானை -
யானைச் சாதியுள் ஒன்று. 142. பண்ணி- ஒப்பனை செய்து, 143, நகர் -ஈண்டு
வைசாலி நகரம் 144. மனை; ஈண்டுகுடிமக்கட்கு ஆகுபெயர். 146
இருத்தி என்னும் செய்தென்னெச்சத்தை இருத்த எனச் செயவெனெச்சமாகத்
திரித்துக் கொள்க,
|
|