|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 12. மாசன மகிழ்ந்தது |  |  |  | 35    தேரும் வையமுஞ் சிவிகையும் 
      பண்டியும்
 ஊரும் 
      ஊர்தியும் பிடிகையும் உயர்வரை
 மையணி வேழமு மாவும் 
      பண்ணி
 மடமொழி 
      மகளிரு மைந்தரும் ஏறிக்
 கடன்மலை பெயருங் காலம் 
      போல
 40    ............விடு தேனிற் 
      பூநகர் புல்லென
 நீரணி பெருமலைச் சாரல் எய்தி
 |  |  |  | (நகரமாந்தர் மலைச்சாலை 
      அடைந்தது.) 35 - 41 ; தேரும்......எய்தி
 |  |  |  | (பொழிப்புரை)  சயந்தியிலுள்ள மகளிரும் மைந்தரும் தேர் முதலிய ஊர்திகளை ஒப்பனைசெய்து 
      அவற்றில் ஏறிக், கடல் மலை நிலத்திலே பெயர்ந்து செல்லுமாறுபோல் அழகிய 
      சயந்தி நகரம் பொலிவிழக்கும்படி அருவியை அணிந்த பெரிய மலைச்சாரலை 
      அடைந்து என்க. |  |  |  | (விளக்கம்)  35.வையம் - 
      கூடாரப்பண்டி; தண்டிகை என்னும் ஊர்தியுமாம், சிவிகை - பல்லக்கு. பண்டி - 
      வண்டி, பிடிகை - ஒருவகை ஊர்தி, 36 - 37. மாவும் இன்னோரன்ன ஊரும் 
      ஊர்தியும் பண்ணிஎன மாறிக்கூட்டுக, உயர்ந்த மலையைநிகர்த்த மைபூசப்பட்ட 
      வேழம் என்க. வேழம் - யானை. மா - குதிரை. பண்ணி - பண்ணுறுத்தி; ஒப்பனை 
      செய்து,
 38, மடமொழி மகளிர் - மடப்பமுடைய 
      மொழியையுடைய  மகளிர். கடல்; மக்கட்கூட்டத்திற்கு உவமை. ஊழி 
      இறுதிக்காலத்தே கடல் ; மலை நிலத்திலே பெயர்தல்போல என்பது 
      கருத்து.
 40. ஈண்டு ஒருசொல் விடுபட்டது. 
      பூநகர்-பொலியுடைய  சயந்திநகர், நீர் - அருவிநீர்,
 | 
 |