|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 12. மாசன மகிழ்ந்தது | | அறைவாய்
முரசின் அதிர்கண்
அன்ன
நிறைவாய்த் தண்சுனை நிவந்த நீலத்
55 தொண்மலர் குற்ற மகளிர்
அவைநம்
கண்மலர் அழித்த கவின போன்மென
நீலமோ டிகன்ற நேரிழை
மகளிரைக் கோலமொடு
கலந்த குமரர் மற்றவை
தேம்புடை விரியக் கூம்பிடங் காட்டிநும் 60
கண்ணிழல் எறிப்பக் கலக்கமொடு நடுங்கி
ஒண்ணிழல் இழந்த ஒளிய
வாகித் தொழுவன
இரக்குந் தோழிகைக்
கொடீஇ ஒழிக
உள்ளழி விவற்றொடு நீரெனக்
கழுமிய வெகுளியர் காணக்
காட்டி 65 மாறாத் தானை மன்னனை
வழுத்தி
ஆறாக் காதலொ டாடினர் ஒருசார்
| | (அக் குறிஞ்சிநிலக் காட்சியினை அம்மாந்தர் நுகர்ந்து
மகிழ்தல்.) 53 - 66 :
அறைவாய்,,,.,,,,.ஆடினர் ஒருசார்
| | (பொழிப்புரை) ஒருசார்
முரசின் கண்ணை ஒத்த வாயையுடைய சுனைகளிலே உயர்ந்து மலர்ந்த ஒளியுடைய
நீலமலர்களைக் கொய்த மகளிர், அம்மலர்கள் நம் கண்ணின் அழகினை
அழித்த அழகுடையன என்று கருதி, அம்மலர்களைப் பகைத்தனராக;
அவர்தம் கணவன்மார் அம்மகளிர் நெஞ்சழிவினைப் போக்கக் கருதி
அவரை அழைத்துச் சென்று அந்நீல மலர்கள்
குவிந்துள்ள இடங்களைக்காட்டி நங்கையீர்! இவற்றைக்
காண்மின்! இவை நும்முடைய கண்ணொளி பாய்தலானே கலங்கி நடுங்கி
ஒளியிழந்தனவாய் நும்மைக் கைகுவித்து இரவாநின்றன; ஆதலான் நுமது
அழிவினைத் தவிர்மின். இம்மலர்களை நுந் தோழியரிடத்தே கொடுமின்
என அக்கூம்பிய மலரைக் கொய்து அவர்க்குக் காட்டாநிற்ப அவரும்
வெகுளிநீங்கித் தத்தங் கணவன்மா ரோடு அரசனை வாழ்த்தி ஆடா
நின்றனர் என்க.
| | (விளக்கம்) 53-54.
முழக்கம் பொருந்திய முரசினது அதிருகின்ற கண்ணை ஒத்த வாயினையுடைய சுனை;
நீரான் நிறைந்த சுனை; தண்சுனை, எனத் தனித்தனி கூட்டுக,
''பறைக்கண் அன்ன நிறைச்சுனை'' (178 ,324,) என்றார் அகத்தினும்.
நிவந்த- ஓங்கி வளர்ந்த. நீலம்-குவளைப்பூ. 55.
குற்ற-பறித்த. அவை-அந்நீல மலர்கள். 56. கண்மலர் அழித்த
கவின போன்மென-கண்ணாகிய மலரின் அழகை அழித்துயர்ந்த அழகுடையனபோலும்
என்று கருதி என்க,போன்ம்-போலும், 57. நீலமொடு-அந்நீல
மலரொடு.-இகன்ற-இகலிய பகைத்த. அந்நேரிழை மகளிரை என்க. 58.
கோலமொடு-ஒப்பனை அழகோடே - குமரர், அவர் தம் கணவன்மார்
என்க, 59. தேம்புடை விரியக் கூம்பிடங் காட்டி - அந்
நீலமலர்கள் தேன்பக்கத்தே வீழக் கூம்பிய இடங்களைக்
காட்டி, 60, கண்ணிழல்-கண்ணெளி, குவளை முதலிய சில
நீர்ப்பூக்கள் ஒளி பாய்தலானே கூம்பும் இயல்புடைய வாதலின் நுங்கண்ணொளி
எறிப்பக் கலக்கமொடு நடுங்கின என்றார்.
61. ஒண்ணிழல் இழந்த ஒளியவாகி-தமக்கு இயல்பாயமைந்த ஒளியையும்
இழந்தனவாகி என்பதாம், 62,. நுமக்குத் தோற்றலானே நும்மைத்
தொழுது இரக்கும்; ஆதலால் அவை அளிய என்றவாறு. அவற்றை
ந்தோழி கையிலே கொடுமின் என்க, கொடீஇ - கொடுத்து. தொழுவன ;
முற்றெச்சம். 63, எளியாரைப் பகைத்தல் தகவன்று என்பதுபற்றி
தீர் இவ்வெளிய - நீல மலரைப் பகைத்தலொழிக என்பார், நீர் இவற்றொடு
உள்ளழியு ஒழிக என்றார். 64
கழுமிய-மிகுந்த. 65. மாறாத்தானைமன்னனைவழுத்தி -
பிறக்கிடாத மறப்படையையுடைய உதயண மன்னனன வாழ்த்தி
என்க 66. ஆறாக்காதல் -தணியாதஅன்பு.
|
|