|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 12. மாசன மகிழ்ந்தது |  |  |  | மாம்பொழிற் 
      சோலை மகிழ்ந்துடண் ஆடும் ஒள்ளிழை மகளிர்க் கொளிர்மதி யன்ன
 சுள்ளிவெண் சூழ்ச்சி சுரும்புணத் 
      தொடுத்து
 நெறிப்பல கூந்தல் நேயந் தோன்றக்
 110    குறிப்பறிந் தணிந்து கூடினர் ஒருசார்
 |  |  |  | 106 - 110; 
ஒள்ளிழை,,,,,,,,கூடினரொருசார் |  |  |  | (பொழிப்புரை)  அம் 
      மகளிருடைய கேள்வர் நிலாப்போன்று ஒளிரும் மராமலர் மாலைகளைப் 
      புதியனவாகத் தொடுத்துக் கொடுபோய் அவர்தம் கூந்தலிலே தமது அன்புடைமை 
      தோன்றும்படி சூட்டி அவர்தம் குறிப்பறிந்று கூடிமகிழாநின்றனர் 
  என்க. |  |  |  | (விளக்கம்)  107 ஓளிரும் 
      திங்கள் போன்று ஒளிரும் சூழ்ச்சி என்க. 108. சுள்ளி - 
      மராமர மலர்;ஆகுபெயர், வெண்சூழ்ச்சி - வெள்ளிய மாலை. சுரும்பு - வண்டு. 
      கரும்புணத் தொடுத்து என்றது புதிய மலர்களை எடுத்துத் தொடுத்து என்பது பட 
      நின்றது,
 109, ,நெறிப்புடைய பலவாகிய கூந்தல் என்க, 
      நெறிப்பு - அறல்படுதல். நேயம் - தம்மன்புடைமை,
 110, அம்மகளிரும் கூடுதற்கவாவும் செவ்வியைக் குறிப்பினாலே 
      உணர்ந்து என்க.
 | 
 |