|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 12. மாசன மகிழ்ந்தது | | எச்சார்
மகுங்கினும் இன்னோர் பிறரும்
விச்சா தரியரின் வியப்பத்
தோன்றிச்
சுனைப்பூக் குற்றுஞ் சுள்ளி சூடியம்
130 சினைப்பூ அணிந்துங் கொடிப்பூக்
கொய்தும்
மகிழின் வட்ட வார்மலர் தொடுத்தும்
பவழப் பிண்டிப் பல்லிணர்
பரிந்தும்
செண்ணத் தளிரிற் கண்ணி கட்டியும்
மாலை தொடுத்நு மலைவளம்
புகழ்ந்தும் 135 கோலக் குறிஞ்சிக்
குரவை ஆடியும்
மணிமயிற் பீலி மாமயிற் றொழுதி
அணிநவம் நோக்கியும் ஆடல்கண்
டுவந்தும் மாதர்ப்
பைங்கிளி மழலை கேட்டும்
| | 127 - 138; எச்சார்......மழலைகேட்டும்
| | (பொழிப்புரை) இங்ஙனமே
எல்லாப் பக்கங்களினும் இன்னோரன்ன பிறமகளிரும் வித்தியாதர
மகளிர்போலக் கண்டோர் வியக்கும்படி தோன்றி, சுனைப்பூக்கொய்தும்,
மராமரப் பூக்களைச் சூடியும், பிற கோட்டுப்பூக்களை அணிந்தும்,
கொடிப்பூக்களைக் கொய்தும், மகிழினது மலரை நெடிய மாலையாகத் தொடுத்தும்,
அசோகினது சிவந்த மலர்களைக் கரத்தி்லேந்தியும், அழகிய
தளிர்மாலைகளைக் கண்ணியாகத் தொடுத்தும், மாலையாகத் தொடுத்தும்,
அம்மலையினது வளத்தைப்புகழ்ந்து பாராட்டியும் குரவைக் கூத்தினை ஆடியும்,
மயிற் கூட்டத்தின் அழகினது நலத்தைக் கண்டும், அவற்றின் ஆடல்களைக்கண்டு
மகிழ்ந்தும் அழகுடைய பசிய கிளிகளின் மழலைமொழிகளைக் கேட்டு உவந்தும்
என்க.
| | (விளக்கம்) 127. எச்சார்
மருங்கினும் - எல்லாப் பக்கங்களினும். 128 விச்சாதரியர்
- கந்தருவமகளிர் கண்டோர் வியப்பத் தோன்றி என்க. சுனைப்பூ -
சுனையின்கண்மலர்ந்த பூ. குற்றும் பறித்தும். சுள்ளி ; ஆகுபெயர்;
மராமரப்பூ. 130, சினைப்பூ - கோட்டுப்பூ. 131. மகிழின் வட்டமான மலரை
நெடிதாகத் தொடுத்தும் என்க. வட்டமலர் வார் தொடுத்தும் என மாறி
ஆக்கச்சொற் பெய்துரைக்க. 132, பவழ நிறமுடைய அசோகினது பலவாகிய இணர்
என்க. பரிதல் - ஏந்துதல். செண்ணம் - அழகு. கண்ணி - தலையிற் சூடுமாலை
மாலை - மார்பினணிவது. 135. அழகிய குறிஞ்சி நிலத்தி்ற்குரிய குரவைக்
கூத்தினையாடியும் என்க. குரவைக் கூத்தாவது - காமமும் வென்றியும்
பொருளாகப் பாடி எழுவரேனும் எண்மரேனும் தம்முள்
கைபிணைந்தாடுவது. 136. மணிமயில் - நீலமணிபோன்ற நிறமுடைய
மயில். மயிலினது தோகையினையும் அவற்றின் கூட்டத்தினையும் கண்டும்
அவற்றின் அணிநலத்தை நோக்கியும் என்க. தொழுதி - கூட்டம் 137. அணி
நலம் - அழகினது நன்மை. 137. மாதர்ப்
பைங்கிளி. - அழகிய பச்சைக்கிளிகள். 138, உவந்தும்
என்பதனை மழலை கேட்டுவந்தும் எனப்பின்னுங் கூட்டுக,
|
|