உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
           கொய்குரல் ஏனலுங் குளிர்சுனைப் பாறையும்
     150    மைவளர் சென்னி மரம்பயில் கானமும்
           மலர்ப்பூஞ் சோலையுந் திளைத்தல் ஆனார்
           ஆடியும் பாடியுங் கூடியும் பிரிந்தும்
           ஊடியும் உணர்ந்தும் ஓடியும் ஒளித்தும்
           நாடியு நடந்து நலம்பா ராட்டியும்
     155    மைந்தரும் மகளிரும் மணந்துவிளை யாடி
           மைந்துற் றனரால் வளமலை புகழ்ந்தென்.

 

 
        149 - 156 : கொய்குரல்.,,,,,,.,புகழ்ந்தென்
 
(பொழிப்புரை) இங்ஙனமாக அம்மைந்தரும் மகளிரும் விரும்பினராய் வளமுடைய அம்மலை நிலத்தைப் பாராட்டித் தினைப்புனங்களிடத்தும், சுனையையுடைய பாறைகளிடத்தும், முகில்கள் கண்வளரா நின்ற உச்சியையுடைய உயரிய மரங்கள் செறிந்த காட்டினூடும், பூம்பொழில் களிடத்தும் அவற்றின் நலங்களை நுகர்ந்தும் தம்முள்ளே கூடியும் பிரிந்தும், ஊடியும்  உணர்ந்தும், ஒடியும் ஒளித்தும், ஒருவரை ஒருவர் நாடியும் நயந்தும் நலம்பாராட்டியும் புணர்ந்தும் விளையாடி நுகர்தலை ஒழியாராயினர் என்க
 
(விளக்கம்) கொய்குரல் ஏனல்-கொய்தற்குரிய பருவமெய்திய கதிரையுடைய தினைப்புனம். ஏனல் - தினை ; ஆகுபெயர்.
    150, மை - முகில். முகில் கண்வளரும் சென்னி என்க. சென்னி - உச்சி. மரம் பயில் கானம் - மரங்கள் நெருங்கிய காடு.
    151. திளைத்தலானார்- நுகர்தலை ஒழியார்.
    156. மைந்து-விருப்பம்,

              12 மாசன மகிழ்த்தது முற்றிற்று,
                --------------------------