|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 13. குறிக்கோள் கேட்டது |  |  |  | உறுவளங் 
      கவினி ஐந்திணை 
      மரனும் பைந்தளிர்க் கொடியும்
 15  
        தந்துணைச் செல்வந் தலைத்தலை பெருகி
 அருமதி முனிவர் நிருமிதம் போல
 |  |  |  | 13 
      - 16 ; உறுவளம்....,.,நிருமிதம் போல |  |  |  | (பொழிப்புரை)  மெய்ஞ்ஞானமுடைய 
      துறவோர் தம் தவவலிமையானே படைத்துவைத்தாற் போன்று குறிஞ்சி முதலிய 
      ஐந்து திணைக்கும் உரியவாகிய மரமும் கொடியும் முதலிய எல்லாம் அவ்வொரு 
      திணையிடத்தேயே தத்தமளவில் இடந்தோறும் செழிப்புடையவாய்ப்
      பெருகி மிக்க வளத்தானே அழகுற்றுத் திகழ்ந்தென்க. |  |  |  | (விளக்கம்)  13. உறு - 
      மிக்க. கவினி - அழகுற்று, 14. ஐந்திணை - குறிஞ்சிமுல்லை 
      மருதம் நெய்தல் பாலை என்பன. மரன் - மரம், மரமும் கொடியுமே கூறினும் 
      இனம்பற்றிப் புற்பூண்டு செடி முதலியனவும் 
      கொள்க
 15. செல்வம். கிழங்கு 
      தளிர் மலர் காய்கனி, முதலியன.
 16. அருமதி - மெய்யறிவு. 
      நிருமிதம் - படைப்பு.
 | 
 |