|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 13. குறிக்கோள் கேட்டது | | மேவன
பலபயின் றீவன
போன்ற பயமரம்
அல்லது கயமரம் இல்லாக்
காவினுள் இரீஇக் காவல் போற்றி 30
மாதவ முனிவர்க்கு மன்னவன் காணும்
கருமம் உண்மை மரபிற் கிளப்பப்
| | 27
- 31 ; மேவன,,,,,கிளப்ப
| | (பொழிப்புரை) மேலும்
அவர்விரும்புவன பலவற்றையும் நெஞ்சுவந்து வழங்குவன போன்று பயன்தரும்
நன்மரமின்றி இழிவான மரங்கள் இல்லாததாகிய அச்சோலையினுள்
இருக்கச்செய்து அவர்க்குப் பாதுகாவலாவாரையும் வைத்துப் பேணிய பின்னர்ப்
பெரிய தவத்தையுடைய அம்முனிவரைக் காணுதற்கு அவர்பால் தனக்கொரு காரியம்
இருத்தலைத் தூதன் வாயிலாய் முறைமையோடே அறிவிப்ப
என்க.
| | (விளக்கம்) 27. மேவன
- விரும்புதற்குரிய பொருள்கள், பயின்று என்றது அடுத்தடுத்து என்பதுபட
நின்றது, 28, பயமரம் - பயனைத்தரும் மரங்கள், அவை
தேமாவும், பலாவும் வாழையும், இன்னோரன்ன பிறவுமாம். கயமரம்-இழிவான
மரங்கள் ; அவை முண்மரங்களும், நச்சு மரங்களும், இன்னோரன்ன
பிறவுமாம் 29. இரீஇ -
இருக்கச் செய்து. 30. பெரிய தவத்தையுடைய முனிவனை
என்க. 31. கிளப்ப - செர்ல்ல.
|
|