|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 13. குறிக்கோள் கேட்டது | | பெருங்குலப்
பிறப்பினும் அரும்பொருள் வகையினும்
இருங்கண் ஞாலத் தின்னுயிர்
ஓம்பும் காவல் பூண்ட
கடத்தினும் விரும்பி 35 இமையோர்
இறைவனை எதிர்கொண் டோம்பும்
அமையா தீட்டிய அருந்தவ
முனிவரின் வியலக
வேந்தனை இயல்புளி
எதிர்கொண்(டு)
அணித்தகு பள்ளி அசோகத்
தணிநிழல்
மணித்தார் மார்பனை மணன்மிசை அடுத்த
40 பத்திப் பன்மலர்ச் சித்திரங்
குயின்ற இயற்றாத்
தவிசின்மிசை இருக்கை காட்டக்
| | 32
- 41 ; பெருங்குல......காட்ட (உதயணகுமரன் முனிவரைக் காண்டலும், அவர்
மகிழ்ந்து வரவேற்றலும்)
| | (பொழிப்புரை) அம்முனிவனும்
உதயணகுமரன் உயர்குடிப்பிறப்பும் சிறந்த செல்வப்பேறும், உலகத்தின்கண்
வாழும் உயிர்கட்குத் துன்பம் வாராமற் பாதுகாத்தலாகிய உயர்ந்த தொழிலும்
உடைமையான் அத்தகையாரைக் காண்டலே சிறப்பாதல் பற்றி
அவ்வுதயணகுமரனைக் கண்டுமகிழ விரும்பித் தேவேந்திரனை எதிர்கொண்டு
வரவேற்கும் தேவவிருடியைப் போன்று அவ்வேந்தர் பெருமானை நூன்மரபானே
எதிர்கொண்டு அழைத்து வந்து அழகிய தமது தவப்பள்ளியின் முன்றிலிலே
உள்ளதோர் அசோக மரத்தினது அழகிய நீழலின்கண் மணற் பரப்பின்
மேல் பன்னிற மலரும் உதிர்ந்து சித்திரம் போன்று திகழா நின்ற இயற்கை
இருக்கையினைக் காட்டாநிற்ப என்க,
| | (விளக்கம்) 32-34,
உயர்ந்த குடிப்பிறப்பும் சிறந்த செல்வமும் உயரிய தொழிலும் உடைய
மன்னர் முனிவரானும் வரவேற்கத் தகுந்தோர் ஆதலின் அம்முனிவரும் விரும்பி
வரவேற்பாராயினர் என்பது கருத்து, இக்கருத்தினை, ஆசிரியர் பரிமேலழகர்
திருக்குறள் 39 ஆம் அதிகாரத்தில் 'உலகபாலர் உருவாய் நின்று
உலகங் காத்தலின் ''இறை''என்றார், ''திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே யென்னும்'' என்று பெரியாரும் பணித்தார். என்று
கூறி.யருளிய நல்லுரையோடு ஒப்பு நோக்குக. 32,
அரும்பொருள் - அரசச்செல்வம். 33. இருங்கண் ஞாலத்து -
பெரிய இடத்தையுடைய உலகத்தே. தொழில்களுள் வைத்துத் தலைசிறந்தது
உயிரோம்புதற் றொழிலேயாதலின் அத்தொழிலைத் தன் கடமையாக
மேற்கொண்டிருத்தலானும் விரும்பி என்பது கருத்து.
35. இமையோர் இறைவன் - தேவேந்திரன். இவன் உதயணகுமரனுக்கு
உவமை. 36. இடையறாது சேர்த்த அரிய
தவமாகிய செல்வத்தையுடைய தேவ முனிவர்போல என்க. இவர் -
அப்பள்ளிலியிருந்த முனிவர்க்கு உவமை.
37. வியலகம் - உலகம். வேந்தன்; உதயனகுமரன். இயல்புளி - நூலிற்
கூறப்பட்ட இயல்பானே. 38. அசோகு - அருகசமயத்தினர்
கொண்டாடும் மரமாதலறிக. 39, அம்மணித்தார் மார்பனை எனச்
சுட்டு வருவித் தோதுக. 41. இயற்றாத் தவிசு - இயற்கையான்
அமைந்த இருக்கை.காட்ட என்றது காட்டி அதன்மிசை அமர்க என்று கூற என்பது பட
நின்றது.
|
|