| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 13. குறிக்கோள் கேட்டது | 
|  | 
| கவற்சி 
      மனத்தொடு காண்டக இருந்ததன் தாண்முதல் சார்ந்து தோண்முதற் 
      றோழனை
 உள்ளி உள்ளழிந் 
      தொழுகுவரைத் தடக்கையின்
 45    வெள்ளிதழ் நறுமலர் 
      வீழப்பை யாந்து
 நினைப்புள் ளுறுத்துவந் நிலைமை நோக்கி
 இனத்தின் இரிந்தாங் கெவ்வகை 
      நிமித்தமும்
 மனத்தின் 
      உற்றவை மறையின் றுணர்தலின்
 துனிவுகொண் மன்னற்கு முனிவன் கூறும்
 | 
|  | 
| 42 
      - 49 ; கவற்சி.....முனிவன் கூறும் | 
|  | 
| (பொழிப்புரை)  அவ்வியற்கை 
      இருக்கையின்மேல் கவலைதேங்கிய மனத்தோடே வீற்றிருந்த அவ்வுதயனகுமரன் 
      யூகியை நினைந்து நினைந்து நெஞ்சம் அழிதலானே நெடிய தன் பெரிய கையிற் 
      கொண்டிருந்த வெள்ளிய இதழையுடையதொரு நறிய மலர் அக்கையினின்றும் நழுவித் 
      தனது துடையின்மேல் வீழ்ந்ததாக; இங்ஙனம் துன்புற்று நினைவினூடே 
      அழுந்தியிருந்த  அவ்வுதயணனுடைய நிலைமையைக் கூர்ந்து நோக்கி 
      மானிடரைக் கூட்டத்தினின்றும் பிரித்துத் தனியே வைத்து அவர் தம் 
      மனத்துள் நினைந்த எண்ணங்களையும் நிமித்தங்களையும் வெளியாக
      உணர்ந்து கொள்ளும் தன்மையுடைய அம்முனிவன் வருந்தாநின்ற அவ்வுதயண 
      மன்னனுக்குக் (பின்வருமாறு)  கூறா நின்றனர் என்க. | 
|  | 
| (விளக்கம்)  42, 
      கவற்சி - கவலை, காண் - காட்சியின்பம், 43. 
      தாள்முதல்-கான்மேல்.
 44. தோள்போன்ற தோழனாகிய யூகியை 
      என்க. தோள் முதற்றோழன் என்பதனோடு,
 'உடுக்கை இழந்தவன் கைபோல 
      ஆங்கே
 இடுக்கண் களைவதாம் 
      நட்பு'
 என்னும் திருக்குறளையும் நினைக.
 45. 
      பையாந்து - துன்புற்று.
 47. இனம் - கூட்டம். இரித்து.- 
      பிரித்துவைத்து. நிமித்தம் - எதிர்கால நிகழ்ச்சியை முன்னறிவித்தல். 
      அதுதானம் பலவகைப்படுதலின் .எவ்வகை நிமித்தமும் என்றார். மனத்தில் 
      உற்றவையும் என உம்மை 
      கொடுத்தோதுக.
 48. மறை - மறைப்பு. 
      வெளிப்படையாக என்பது கருத்து.
 49. துணிவு - துன்பம். மன்னற்கு ; 
      உதயணனுக்கு,
 |