| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 13. குறிக்கோள் கேட்டது | 
|  | 
| வீழ்ந்த வெண்மலர் வெறுநிலம் படாது தாழ்ந்த கச்சைநின் தாள்முதல் 
      தங்கலிற்
 பிரிந்த 
      போகம் பெயர்த்தும் பெறுகுவை
 60   நிலத்துமிசை 
      இருந்தனை ஆதலின் மற்றுநின்
 தலைப்பெரு நகரமொடு நன்னாடு 
      தழீஇக்
 கொற்றங் 
      கோடலு முற்றிய தாகி
 முன்னிய நின்றவை முடியந் தோன்றுமென
 | 
|  | 
| 57 
      - 63 ; வீழ்ந்த,..,...தோன்றுமென்று | 
|  | 
| (பொழிப்புரை)  அம்மலர் தானும் 
      வறுநிலத்தே வீழாமல் நினது கான்மேல் வீழ்ந்து கிடத்தலான் அங்ஙனம் 
      பிரிந்த இன்பநுகர்ச்சியை நீ மீண்டும் எய்துவை என்பது திண்ணம்; இனி நீ 
      நிலத்தின்மேல் இருக்கின்றனை; அதனால் நினது தலைநகரத் தோடே நல்ல 
      நாட்டினையும் நீ மீளவும் பெறுவாய்; மேலும் நினது வெற்றியும் முற்றியதாகி 
      எஞ்சிநின்ற நின் கருத்துக்களும் நிறைவுறும் என்பதும் நன்கு தோன்றும் 
      (என்றார்) என்க. | 
|  | 
| (விளக்கம்)  57.தாழக் கட்டிய கச்சையையுடைய நின் கான் மேல் என்க 62. கொற்றங் 
      கோடலும் - வெற்றி கொள்ளுதற் றொழிலும் என்க.
 63. முன்னியநின்றவை - 
      எஞ்சி நின்ற கருத்துக்கள்.
 |