|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 13. குறிக்கோள் கேட்டது | | றெண்ணிய இப்பொருள் திண்ணிதின் எய்தும் 65
பெறும் பயம் இதுவெனப் பிழைத்த லின்றி
உறும்பெருஞ் சாரணர் உரைவே
றுண்மையும் இறுவா
எழுச்சியும் இத்துணை அளவென.
உறுதவ முனிவன் உள்விரித்
தொழியாது வத்தவர்
பெருமகன் தத்துற வகலக் 70 கழிபொருள்
எதிர்பொருள் ஏது வாக
அழிபொருள் அன்றி ஆகுபயங் கூறத்
| | 64
- 71 ; எண்ணிய,,,,,,,ஆகுபயங் கூற
| | (பொழிப்புரை) என்றிவ்வாறு
நிமித்தம் கூறிய அத் தவமுனிவன் மேலும் நீ எண்ணியவற்றுள் இன்னின்ன
திண்ணிதாக நினக்கு எய்தும் என்றும், நீ இனிப் பெறக்கிடந்த பயன்கள்
இவை இவை என்றும் கூறிப் பின்னரும் சாரணருடைய உபதேச மொழிகளையும் கூறி
நினக்கு வீடெய்தும் காலமும் இவ்வளவினது என்றும் அவ்வுதயணகுமரனுடைய
மனத்தடுமாற்றம் அகலும்படி அவன்பால் நின்று கழியும் பொருளும்
எய்தும் போருளும் இவற்றிற்கு ஏதுவாக அழியும் பொருளும் அன்றி மேலும்
ஆக்கமாகிய பயன்களையும் கூறாநிற்ப என்க.
| | (விளக்கம்) 65.
பெறும் பயன் - எய்தும் பயன். பிழைத்தல் இன்றி -
தவறின்றி. 66. சாரணர் உரை -
சாரணருடைய உபதேசம். 67, இறுவாய் எழுச்சி-
வீடுபேறு. 69, தத்துறவு - மனத்தடுமாற்றம்.
|
|