| (விளக்கம்)  54, 
      பொருவு இல் போகம் - ஒப்பற்ற இன்ப நுகர்ச்சி, ஒருமீக் 
      கூறிய-ஒப்பற்றதாகப் புகழப்பட்ட என்க. 55. உருவம் - அழகு. 
      56. வள்ளி - சங்கு வளையல். பனை - மூங்கில். அமர்நகை-விரும்புதற்குக் 
      காரணமான புன்முறுவல்.
 57. வாள் மணிக் கொடும் பூண் - 
      ஒளியுடைய மணிகளிழைத்த வளைந்த அணிகலன்கள்,
 58. செய்யவாயினும் - சிவந்தனவானாலும்,
 59. ஆட்டினும் - 
      ஆடுதலானும். திளைப்பினும் - ஆடுதலானும்.
 60 - 61. பொலிவுடைய 
      குழையணிந்த ஏவன் மகளிர் பொன்வள்ளத்திலே ஏந்திக் கொணரும் தேன் 
      மணக்கும் தேறலோடு தெளிந்த மதுவினையும் நுகர்தலானும் என்க.
      பொலங்கலம் - பொற்கலம். தேம் - தேன். தேறல் - கட்டெளிவு. மது - 
      பழச்சாற்றாலே இயற்றியதொரு கள்.
 62 - 63. செந்தாமரை 
      மலரின் சிவந்த இதழ் போன்று சிறந்த நிறத்தைப் பரப்பிய அழகிய நெடிய 
      கண் என்க,
 64. கனிந்த காதல் - முதிர்ந்த காதல். முனிந்து 
      - ஊடி. ஈண்டு. ஒருசீர் விடுபட்டது.
 65. பிரிவின்மையானே முயக்கும் இன்றி 
      என்க.
 66, பிரிவரும் புள் - இருதலைப்புள். ஒருமையின் ஒட்டி 
      என்றது இரண்டறக் கலந்து என்றவாறு.
 67. வண்டு ஆர் சோலை-வண்டுகள் ஆரவாரிக்கும் 
      சோலை. சோலையினையுடைய வளவிய மலைச்சாரலிலே என்க. 
      .
 68. அயர்ப - செய்வர், உவகையுள் மகிழ்ந்து-இன்பத்துள் 
      மகிழ்ந்தென்க.
 14. 
      உண்டாட்டு முற்றிற்று,
 |