|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 15. விரிசிகை மாலைசூட்டு |  |  |  | வண்டார் சோலை 
      வளமலைச் சாரல் உண்டாட் டயரும் 
      பொழுதின் ஒருநாள்
 வழைஅமன் 
      முன்றிலொடு வார்மணல் பரப்பிக்
 கழைவளர் கான்யாறு கல்லலைத் தொழுகி
 5   ஊகம் 
      உகளும் உயர்பெருஞ் சினைய
 நாகப் 
      படப்பையொடு நறுமலர் துறுமிச்
 சந்தனப் பலகைச் சதுரக் கூட்டமொடு
 மந்திரச் சாலை மருங்கணி பெற்ற
 ஆத்திரை யாளர் சேக்குங் 
      கொட்டிலும்
 10   நெடியவன் மூவகைப் படிவம் 
      பயின்ற
 எழுதுநிலை மாடமும் 
      இடுகுகொடிப் பந்தரும்
 கல்லறை 
      உறையுளொடு பல்லிடம் பயின்றே
 |  |  |  | 1-12 : வண்டார் ....பயின்றே |  |  |  | (பொழிப்புரை)  இங்ஙனம் 
      மலைச்சாரலிலே உண்டாடி மகிழ்கின்ற பொழுது ஒருநாள், சுரபுன்னை 
      மரஞ்செறிந்த மணல் பரப்பப்பட்ட முன்றிலையுடைத்தாய் மூங்கில் வளர்ந்த 
      கான்யாற்றின் அயலதாய், நாகமரச் சோலையும் நறிய மலர்க்காவும் 
      சூழப்பட்டதாய்ச சந்தனமரத்தாலாய சதுரப்பலகைகளையுடைய தாய், 
      மந்திரமோதும் சாலையை உடைத்தாய், யாத்திரையாளர் தங்குதற்குரிய 
      அழகுமிக்க கொட்டிலும் திருமாலினது மூன்று வகைப்பட்ட திருவுருவங்களையும் 
      வரையப்பட்ட ஓவியமாடமும் பூங்கொடிகளால் இயற்றப்பட்ட பந்தரும் 
      கற்களானியற்றிய இருக்கைகளும் இன்னோரன்ன பலவேறு இடங்களும் உடைத்தாய் 
      என்க, |  |  |  | (விளக்கம்)  1. வண்டுகள் 
      ஆரவாரிக்கும் சோலையினையுடைய வளவிய மலைச்சாரலிலே
      என்க, 2.. உண்டாடுதலைச் செய்யாநின்ற பொழுதில் ஒருநாள் 
      என்க.
 3, வழை-சுரபுன்னை. அமலுதல்-செறிதல். வார் மணல் ; 
      வினைத்தொகை; வார்ந்த மணல் என்க. வார்தலாவது 
      எக்கரிடுதல்.
 4. கான்யாறு கல்லலைத்து ஒழுக என்க. அயலே 
      கான்யாறு ஒழுகாநிற்ப அதன் கரையிலே அணிபெற்ற கொட்டில் எனக் கூட்டுக, 4. 
      கான்யாறு என இயைத்துக் கொள்க.
 5. 
      ஊகம்-கருங்குரங்கு.
 6. 
      நாகப்படப்பை-நாகமரத்தோட்டம்.கருங்குரங்கு தாவா நின்ற உயர்ந்த
      கிளைகளையுடையவாகிய நாகமரம் என்க.
 7. சதுர வடிவினவாகிய சந்தனப்பலகைக்
      கூட்டம் என்க, சந்தன மரத்தாலியற்றப்பட்ட மணைப்பலகை என்பது கருத்து.
      துறுமி - செறிந்து.
 8, மந்திரச்சாலை - தேனித்தற்குரிய 
      (தியானித்தற்கு) இடம்.  மந்திரச்சாலையும் அதன் அயலே அழகுற்ற 
      கொட்டிலும் என்க.
 9. யாத்திரை செய்துவரும் விருந்தினர் 
      தங்குதற்குரிய கொட்டில்  என்க.
 10. நெடியவன்-திருமால். அவனது மூவகைப் படிவங்களாவன 
      ;-நீர்வாழ் உயிரினமும் விலங்கினமும் மானிடமும் ஆகிய மூன்று கூற்றினும் 
      அடங்கிய மீன் ஆமை பன்றி மானுட மடங்கல் குதிரை வாமனன் பரசுராமன் 
      இராமன் பலதேவன் கண்ணன் என்பன,
 11, எழுதுநிலை 
      மாடம்-ஓவியமாடம். மிடுகு-பிணைந்த, கொடி-  பூங்கொடி.
 12, கல்லறை உறையுள்,- கல்லை. அறுத்தியற்றிய இருக்கை என்க. பல்லிடம் - 
      (இன்னோரன்ன உண்ணவும் உறங்கவும் ஓதவும்  உரிய) பிற பலவிடங்ககும் 
      என்க. பல்லிடம் பயின்று (35) பொலிவொடு புணர்ந்த பொழிலகம்  என 
      இயையும்.
 | 
 |