|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 15. விரிசிகை மாலைசூட்டு | | முருந்தொளி முருக்கிய திருந்தொளி முறுவல்
நேர்கொடு சிவந்த வார்கொடி
மூக்கின்
பொருகயல் போலப் புடைசேர்ந் துலாஅய்ச் 85
செருவேல் பழிந்த சேயரி நெடுங்கண்
கண்ணிற் கேற்ப நுண்ணிதின்
ஒழுகி முரிந்தேந்து
புருவம் பொருந்திய
பூநுதல்
நாள்வாய் வீழ்ந்த நறுநீர் வள்ளைத்
தாள்வாட் டன்ன தகையமை காதின்
நீல மாமணி நிமிர்ந்தியன்
றன்ன 90 கோலங் கொண்ட
குறுநெறிக் கூழை
ஒருசிகை முடித்த உறுப்பமை கோலத்து
விரிசிகை என்னும் விளங்கிழைக்
குறுமகள்
| | 82 - 93; முருந்தொளி......குறுமகள்
| | (பொழிப்புரை) முருந்தினை
வென்ற ஒளிமுறுவலினையும் நேர்மைகொண்டு சிவந்த நெடிய மூக்கினையும்,
போரிடுங் கயல் மீன்களை ஒத்து மிளிரா நிற்பனவும் வேலைப்பழிப்பனவும்
சிவந்தவரிபடர்ந்தனவும் ஆகிய நீண்ட கண்களையும், அக்கண்ணின் அழகுக்கு
ஏற்ப நுண்ணிதின் நீண்டு முரிந்து உயர்ந்த புருவத் தினையும்,
அப்புருவத்திற்கேற்ற பொலிவுடைய நுதலினையும் ஞாயிற்றின் வெயிலிலே
பறித்துப் போடப்பட்ட வள்ளையினது வாடிய தண்டினை ஒத்த அழகமைந்த
செவியினையும், நீலமணி நீண்டு வளர்ந்தாலொத்த அழகினைக்
கொண்ட குறிய நெறிப்பினையுடைய கூந்தலினையும், அக்கூந்தலைக் கை செய்யாது
ஒரே சிகையாக முடிக்கப்பட்ட அழகினையும உடைய விரிசிகை என்னும்
குறுமகள் என்க,
| | (விளக்கம்) 82.. முருந்து
- மயிலிறகின் அடிக்குருத்து. முருக்கிய - வென்ற. முறுவல் -
பல். 83, நேர்மையைக் .கொண்டென்க. வார் கொடி மூக்கின் -
நீண்ட பொற்கொடிபோன்ற மூக்கு என்க, 84,
கண்களுக்குத் தம்முட்போரிடு கின்ற இரண்டு கயல்மீன்கள் உவமை, புடை
சேர்ந்து உலாஅய் - பக்கங்களை அணுகிச்சென்று உலாவி என்க.
85.செருவேல் - போர்வேல். சேயரி-சிவந்த கோடு. 86 -
87நெடுங்கண்ணினையும் அக்கண்ணிற்கேற்ப என விரிக்க. 87.
முரிந்தேந்து புருவம் - வளைந்துயர்ந்த புருவம், பூநுதல் - பொலிவுடைய
நெற்றி 88. நாள் வாய் வீழ்ந்த வெயிலிற் போகட்ட
என்க. நாள் வெயிலிற்கு ஆகுபெயர், இது ஞாயிற்றிற்காகி அதன் வெயிலிற்கு
இருமடி ஆகுபெயராயிற்று. நாள்வாய் வீழ்ந்த என்றது, வள்ளைத்தண்டு
வாடுதற்குக் குறிப்பேதுவாய் நின்றது 89. வாட்டு -
வாடல். தகை-அழகு. 90 - 91, நீலமணி நீண்டு வளர்ந்தாற்
போன்ற அழகினைக் கொண்ட கூழை, குறுநெறிக் கூழை எனத் தனித்தனி
கூட்டுக, மா - கரிய. குறுநெறிய - குறிய நெறிப்பினையுடைய, நெறிப்பு -
அறல் படல் கூழை - கூந்தல், 92. பலவகையிற் பண்படுத்தி முடியாமல்
ஒரே முடிப்பாக முடிந்த சிகை என்பார் ஒருசிகை முடித்த
என்றார். சிகை - கொண்டை.
|
|