|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 15. விரிசிகை மாலைசூட்டு | | நூலொடு
புணர்ந்த வாலியன் மார்பின்
115 தவத்தியற் பள்ளி சார்ந்தனள்
உறையும் இயற்கைத்
திருமகள் இவளென எண்ணி
இணைமலர் நெடுங்கண் இமைத்தலும் வாடிய
துணைமலர்க் கோதைத் தோற்றமுங்
கண்டே முனிவர்
மகளெனத் தெளிவுமுந் துறீஇ 120 ஐய
மின்றிஆணை யோட்டிய
தெய்வத் திகிரி கைவலத்
துயரிய நிலப்பெரு
மன்னர் மகளிர்க் கமைந்த
இலக்கணக் கூட்டம் இயற்படத்
தெரியா
| | (அவ்விரிசிகை நல்லாளைக் கண்ட உதயணகுமரன்
நிலைமை)
114-123 ; நூலொடு,..,,தெரியா
| | (பொழிப்புரை) இவள்
மெய்ந்நெறி நூலோடு பொருந்திய தூயமுறைமை யோடே. தவம் இயற்றும்
.இத்தவப்பள்ளியின்கண் உறைதலை விரும்பிவந்து உறையாநின்ற திருமகளோ?
என முதலில் ஐயுற்றுப் பின்னர் அவளுடைய தாமரைமலர் போன்ற
அழகிய நெடியகண்கள் இமைத்தலையும் மாலை வாடியிருத்தலையும் கண்டு, இவள்
திருமகள் அல்லள்; இப்பள்ளியில உறையும் முனிவர் மகளே ஆதல் வேண்டும்
எனத் துணிந்து,பின்னரும்அவள்பால் அமைந்துகிடந்த அரசமகளிர்க்குரிய
இலக்கணங்களை அந்நூலிலக்கணத்தானே ஆராய்ந்துணர்ந்து என்க,
| | (விளக்கம்) 114 நூல் -
மெய்ந்நூல் வால் இயல்மரபின்தவம் - தூய இயல்பினையுடைய முறைமையையுடைய
தவவொழுக்கம். 115. சார்ந்தனள் ; முற்றெச்சம். ஈண்டு
உறைதலை விரும்பி உறையும் திகுமகளோ? என்று ஐயுற்று
என்க. 116. இயற்கையினையுடைய திருமகள் என்க.
திருமகளோ எனற்பாலதாகிய ஐயஓகாரம் செய்யுள் விகாரத்தாற்றொக்கது.
திருமளோ அல்லது மானிடமகளோ என்று ஐயுற்று என. விரித்தோதுக.
எண்ணி என்பது ஐயுற்று என்பதுபட நின்றது. 117, இணைக்கப்பட்ட
இரண்டு செந்தாமரைமலரை ஒத்த அழகுடைய நெடிய கண்கள் இமைத்தலையும்
என்க. 118, துணைமலர்; வினைத்தொகை; துணைத்தல் -
பிணைத்தல் கோதை - மாலை. 119 - 120,
ஐயமின்றி முனிவர் மகளெனத் தெளிவு முந்துறீஇ என மாறுக. முந்துறீஇ - முந்தி.
தெளிவு முந்துறீஇ என்றது தெளிந்து என்றவாறு. 121
- 123, பின்னரும் தெய்வத்தன்மையுடைய ஆணைச்சக்கரத்தைக் கைவன்மையானே
உயர்த்திய முடிவேந்தர் மகளிர்க்குப் பொருந்திய இலக்கணத் தொகுதி
அவள்பாற் கிடத்தலை அழகு இலக்கணநூலுக்குப் பொருந்த ஆராய்ந்துணர்ந்து
என்க. தெரியா-தெரிந்து, திகிரி - ஆணைச் சக்கரம். கைவலம் - கைவன்மை.
உயரிய-உயர்ந்த. பெருமன்னர் -
முடிவேந்தர், 123. இயல்பட - அழகு நூல் இலக்கணத்திற்கேற்ப
என்க.
|
|