|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 15. விரிசிகை மாலைசூட்டு | | அரும்படை
வழக்கின் அன்றியு முனியாது 125
நரம்புபொரத் தழும்பிய திருந்துவிரல்
அங்கையிற்
புரிநூன் மீக்கோள் பூம்புறத் தேற்றதன்
தெரிநூல் வாங்கி இருநூற்
கொளீஇப் பவழமும்
வெள்ளியும். பசும்பொன் அடரும்
திகழ்கதிர் முத்தமுந் திருமணிக்
காசும் 130 உறழ்படக் கோத்த ஒளியின
போல வண்ணம்
வாடாது வாசங் கலந்த
தண்ணறும் பன்மலர் தானத் திரீஇ
வாட்டொழில் தடக்கையின் வத்தவர்
பெருமகன்
சூட்டுநலம் புனைந்து சுடர்நுதற் கீய
| | (உதயணன் விரிசிகைக்கு
மாலைபுனைந்தளிந்தல்) 124-134;
அரும்படை...,.,சுடர்நுதற்கீய
| | (பொழிப்புரை) தன் பகைவர்
தப்புதல் அரிய படைக்கலன்களைச் செலுத்துதலுண்மையானும், அல்லதூஉம் வெறாதே
எப்பொழுதும் யாழை இயக்குதலான் அதன்நரம்பு பொருதலானும் தழும்புடையதாகிய
திருந்துதலுற்ற விரலையுடைய தனதுகையானே தனது மேலாடையை வாங்கி
அதன்கண் ஆராய்ந்து தேர்ந்த நூல்களுள் இரண்டினை உருவி
அவ்விரண்டினையும் சேர்த்துத் திரித்துப் பவழமும் வெள்ளித் தகடும்
பசும் பொற்றகடும் முத்தும் மணிக்காசும் ஒன்றனோடொன்று ஒளியால்
மாறுபடவைத்துக் கோத்த மாலைபோல நிறம் வாடாமல் மணங்கலந்த
தண்ணிய நறிய பலவேறு நிறமமைந்த மலர்களையும் அந்நூலின்கண் உரிய
விடங்களிலே வைத்துத் தனது கைவன்மையானே அவ்வுதயண குமரன் அழகிய
மாலைகளைப் புனைந்து அவ்விரிசிகைக்கு அளிப்ப என்க.
| | (விளக்கம்) 124. பகைவர்
தடுத்தற்கரிய படை எனினுமாம்; படை - போர்க்கருவி. முனியாது -
வெறாமல். 125. நரம்பு - யாழ்நரம்பு, திருந்து விரல் -
இலக்கணத்திற்குத்தகத் திருந்திய விரல். அங்கை-ஈண்டு அழகிய கை;அகங்கை
என்பதன்று. 126. முறுக்கிய நூலானாகிய மீக்கோள் என்க.
மீக்கோள். மேலாடை, அங்கையின் - பூம்புறத்து மீக்கோள் ஏற்று அதன் நூல்
வாங்கி என மாறுக, பூம்புறம் - பொலிவுடைய முதுகு, தெரிநூல் ;
வினைத்தொகை. 127, கொளீஇ -
கொளுவி.. 128. பவழ முதலியன நிறம்பற்றிவந்த
உவமைகள், 128. அடர் - தகடு, அதனை வெள்ளியோடும்
கூட்டுக, 129, விளங்குகின்ற கதிர்களையுடைய முத்தும்
என்க. திருமணிக்காசு - அழகிய மணிகளாகிய காசு. காசு; மணிப்பொதுப்
பெயர், 130, உறழ்பட - ஒன்றனோடொன்று நிறத்தானே
மாறுபடும்படி. ஒளியின - ஒளிமாலை. 131. வண்ணம்
- நிறம் வாசம் - மணம் 132. தானம் - உரியஇடம்,
இரீஇ - வைத்து, 133, வாள் தொழில் -
போர்த்தொழில், 134. சூட்டு - மாலை. நலம் உண்டாகப்
புனைந்து. 135. சுடர் நுதல் ; அன்மொழித்தொகை ;
விரிசிகை,
|
|