|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 16. ஊடல் உணர்த்தியது | | கச்சத் தானைக் காவலன் மடமகள்
பெருமகன் மார்பிற் பிரியா
துறையுமோர் 45 திருமகள் உளளெனச் செவியிற்
கேட்பினும் கதுமெனப்
பொறாஅ ளாதலிற் கண்கூ
டதுஅவண் கண்டகத் தறாஅ அழற்சியில்
தற்புடை சார்ந்த தவமுது
மகளையும் கைப்புடை நின்ற
காஞ்சனை தன்னையும் 50 அற்பிடை யறாஅ எந்தை
அணிநகர் உய்த்தனிர்
கொடுமின்என் றூழடி யொதுங்கிச்
சிதர்மலர் அணிந்து செந்தளிர்
ஒழுகிய புதுமலர்ச்
சோலையுட் புலந்தவள் அகல
| | 43 - 53 ;
கச்சத்தானை.......................புலந்தவளகல
| | (பொழிப்புரை) கச்சம்
என்னும் பேரெண் அளவின தாகிய பெரும்படையையுடைய பிரச்சோதன மன்னனுடைய
மடமகளாகிய இவ் வாசவத்த்தை 'நின் கணவன் மார்பில் எப்பொழுதும்
நீங்காது உறைகின்றாள் திருமகள் எண்னும் ஒருபென் ' என்று யாரேனும்
கூற அதனைச் செவியினாலே கேட்டவிடத்தும் பொறுக்கமாட்டாள்; இத்தகைய
இயல்புடைய அவள் அவ் வுதயண குமரன் மடிமேல் ஒருத்தி
அமர்ந்திருந்த அந்நிகழ்ச்சியினைத் தானே கண்கூடாகக் கண்டாள் ஆதலின்
தன் நெஞ்சத்தே அறாத சினமுடையளார்யினள்.அச்சினத்தானே புலந்து
தன் பக்கத்தே நின்ற சாங்கியத்தாயையும், அவள் பக்கத்தே நின்ற காஞ்சன
மாலையயும் நோக்கி ' அன்புடையீர்! நீயிர் என்னை இடையறவு படாத
அன்புடைய என் தந்தையினது அழகிய உச்சயினி நகர்க்கு அழைத்துக்கொடு
செல்லுமின்' என்று கூறி அவ்விடத்தினின்றும் அகன்று மலரணிந்து செந்தளிர்
விடுத்ததொரு புது மலர்ப்பாழிலினுள்ளே புகா நிற்ப என்க.
| | (விளக்கம்) 43, கச்சம் - ஒருபேரென்; (நூறாயிரம் என்பாரு முளர்.) இதனை
; 'பார்நனை
மதத்த பல்பேய் பருந்தொடு பவரச் செல்லும்
போர்மதக் களிறு பொற்றேர் நான்கரைக்
கச்சமாகும்
'
(சீவக - 2219 எனவரும்
செய்யுளானும், இதற்கு
நச்சினார்கினியர்,
'கச்சம் (தேவகோடி என்பன சில ) எண்ணுப் பெயர்(கன்)' என
விளக்கங் கூறலானும் உணர்க காவலன்; பிரச்சோதன மன்னன். மடமகள்;
வாசவதத்தை. 44, பெருமகன்;
உதயணகுமரன். 45. ஓர் திருமகள் உளள் என்றது திருமகள்
என்பாளொரு பெண் உளள் என்றவாறு, 46. கதுமெனக்
கேட்பினும் பொறாள் என மாறுக. கதுமென - விரைந்து. 46
- 47. அவள் அது கண் கூடு கண்டு அகத்து அறா அழற்சியின் என மாறுக. அவள்
என்பது அத்தகையோள் என்பது படநின்றது. அது என்றது, உதயணன் விரிசிகையைத்
தன் மடி மீது இருத்தி மலர் சூட்டிய அந்நிகழ்ச்சியினை
என்றவாறு.கண்டமையானே தன் அகத்தே எழுந்த அறா அழற்சியான்
என்க. 47. தற்புடை - தன் பக்கத்தே. தவமுதுமகள்;
சாவ்கியத்தாய், 48. கைப்புடை - பக்கம். காஞ்சனை
தன்னையும் நோக்கி என்க. 50. அற்பு - அன்பு. அன்பிடையறாஅ எந்தை
என்றது, உதயணன் அன்பு இடையறவுடைத்து என்பதனைக் குறிப்பாகக் கூறியபடியாம்.
நகர் - உஞ்சை நகரம். 51. உய்த்தனிர் கொடுமின்
என்றது ஒருசொன்னீர்மைத்து. உய்த்துக் கொடுமின் என்றவாறு. உய்த்துக்
கொடுத்தல் - செலுத்தி விடுதல். 'தணந்தனை யாயின் எம் இல்லுய்த்துக்
கொடுமோ' எனவரும் குறுந்தொகையும் (254 - 3) நினைக. ஊழ் -
முறை. 52, சிதர் - வண்டு, சிதர்மலர்; வினைத்தொகை
எனினுமாம். தளிர் ஒழுகிய - தளிர் விடுத்த; தளிர்த்த என்றவாறு.
|
|