|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 16. ஊடல் உணர்த்தியது | | தாழ்வரை
அடுக்கத்துத் தளிர்சேர் தேமாத்
தூழுறு தீங்கனி உண்ணா விருத்தலின்
இவறினை நீயெனத் தவறுமுந் துறீஇ
105 இனப்பெருந் தலைமகன் ஆணையின்
ஆட்டித் தனக்கரண் காணுது
தடவரை தத்திப் பெருமகன்
கோயில் திருமுற் பாய்ந்தெனக்
கரணீ அருளென் றடைவது போன்றோர்
கருமுக முசுக்கலை கதுமெனத் தோன்ற
| | [ஒரு குரங்கிண்
சயல்] 102 - 109 ;
தாழ்வரை.....................தோன்ற
| | (பொழிப்புரை) அம் மலைப்
பக்கத்தே ஒரு கருங்குரங்கு ஒரு தேமாவினது இனிய பழத்தினைத் தனித்துண்டு
கொண்டிருப்ப, அதுகண்ட அக்குரக்கினத் தலைவனாகிய குரங்கு 'நீ எனக்கீயாது
இவறாநின்றனை' என அக்குரங்கின்மேல் ஒரு தவற்றினை ஏற்றி
அத்தவற்றிற்காக அதனை அலைத்து வருத்தாநிற்ப,அதனினின்றும் அக்குரங்கு
தப்புதற்கு இடங்காரணப் பெறாமல் பெரிய பல மலைகளையும் தாவிக் கடந்து,
அவ்வுதயணனுடைய அப் பகற்பள்ளியின் முன்றிலிலெ குதித்துப்
'பெருமானே எளியனுக்கு நீயே புகலிடம் ஆவாய்; என்னைக் காத்தருள்க!
'என்று தஞ்சம் புகுவதுபோலத் தோன்றா நிற்ப என்க,
| | (விளக்கம்) 102,
தாழ்வரை அடுக்கம் - தாழ்ந்த மலைப்பக்கம். தேமாத்து -
தேமாமரத்தினது. 103, ஊழுறு தீங்கனி - ஊழ்த்தலுற்ற இனிய
பழம். ஊழ்த்தல் - தோன்றுதல். உண்ணாவிருத்தல்; ஒருசொல் ;
உண்ணுநிற்ப. 104. இவறினை - கொடாது உலோவினை. தவறுமுந்துறீஇ
- தவற்றினை முன்னிட்டு. 105. குரங்கினங்கட்கு
அரசனான குரங்கு என்க. பெருந்தலைமகன் - அரசன். ஆட்டி என்னும் எச்சத்தைச்
செயவெனெச்சமாகக் கொள்க. ஆட்டுதல் - அலைத்து
வருத்துதல். 106. அக்குரங்கு தான் தப்புதற்கோர் அரணைக்
கானப்பெறாமல் என்க. தடவரை - பெரிய மலை, தத்தி -
தாவி. 107. பெருமகன் கோயில், உதயணன் வாசவதத்தையோடிருந்த
அப் பகலணைப் பள்ளி என்க. 108. அரண் -
பாதுகாவல்; புகலிடம். 109, முசுக்கலை - குரங்கினுள் ஒருவகைக்
குரங்கு. கதும்என - விரைந்து.
|
|