(பொழிப்புரை) இவ்வாற்றாற்
கூடிய வேந்தண் தனது மரபுத் தொழிலாகிய அரசாட்சியையும் தன் நெஞ்சிற்
கருதாத வனாய்ச் சிறப்பாற் றகுதி பெற்ற அவ்வாசவதத்தையோடு கூடி
விளையாடுதலையே பெரிதும் விரும்பி அக்காட்டினூடே நீண்ட நாள் இனி தாக
உறைவானாயினன் என்க,
(விளக்கம்) 119.
தார்கெழு - மாலை பொருந்திய. வேந்தன் ; அவ்வுதயண
குமரன், 120, வழி - தன் மரபு, தொழிற் கருமம்;
இருபெயரொட்டு, 122. கழிக்குவன் - (காலங்) கழிப்பான்,
கானம் - காடு. மாது, ஓ - இரண்டும் அசைச்சொல்,