|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 17. தேவியைப் பிரித்தது | | அருளிக்
கேண்மோ அரசியல் வழாஅ 115 இருளறு
செங்கோல் ஏயர்
இறைவன்
சேனை நாப்பணும் பெருமான் செய்த
யானை மாயத் தருந்தளைப்
படுதலிற்
கொங்கலர் நறுந்தார்க் கோல
மார்பிற்
பிங்கல கடகர் பெற்றியிற் பிழைப்பப்
120 பாஞ்சால ராயன் பரந்த படையொடு
மாண்கோ சம்பி வௌவியதும்
அறியான் அருஞ்சுழி
நீத்தத் தாழு மொருவன்
பெரும்புணை பெற்ற பெற்றி போல
நிற்பெறு சிறப்பொடு நெடுநகர்
புகல 125 முற்படத் தோன்றிய முகைப்பூண்
மார்வன் தற்படு
துயரம் தன்மனத் தணையான்
மட்டுறு கோதாய் மற்றுநின் வனமுலை
| | 114
- 127 ; அரசியல்.......கோதாய்
| | (பொழிப்புரை) கோதாய் !
அரசியலின்கண் வழுவுதலில்லாத ஏயர்குலத் தோன்றலாகிய நம் மனனன்
நுந்தந்தையாகிய பிரச்சோதன மன்னன் இயற்றிய யானை மாயத்தாலே வீடு
பெறலரிய தளையிற் பட்டமையாலே அவன் தம்பியராகிய பிங்கலகடகர்
தம் நிலையின்கண் நிற்றலாற்றாதவராய்ப் பிழைசெய்வாராயினர்;
அச் குழ்நிலை உணர்ந்த பாஞ்சால மன்னன் பெரிய படையோடு
வந்து மாட்சிமையுடைய கோசம்பி என்னும் நந்தலை
நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்; மற்று உதயண மன்னனோ
இவ்விழிதகவையும் உணராதவனாய் வெள்ளத்திலே ஆழ்ந்துபடுமொருவன்
அங்குப் பெற்றதொரு புணைபோன்ற நும்மைப் பெற்ற தொரு சிறப்பையே
மேற்கொண்டு, நெடிய உவளகத் தொடுங்குத லொன்றையே விரும்பி
முன்னரே தனக்குத் தோன்றியுள்ள துயரத்தை நினைதலில்லாதவன்
ஆயினன் என்க.
| | (விளக்கம்) 114 - 15.
அரசியல் வழா - அரசியற் காரியங்களிலே சிறிதும் வழுவுதலில்லாத. 115.
இருள் - துன்பம். அத்தகைய சிறந்த மரபிற் பிறந்து வைத்தும் இங்ஙனம்
ஆயினன் என்பான், குலத்தை விதந்தெடுத் தோதினான். ஏயர்
இறைவன் - ஏயர் குலத்திற் பிறந்த மன்னன்; உதயணன் 116.
நாப்பண் - நடுவே. சேனையின் நடுவே நிற்கும் பொழுதே செய்த மாயத்தால்
என்க. 117.நும்பெருமான் என்றது, பிரசோதனனை. அருந்தளை -
தப்பலரிய சிறை. 118. தேன்விரியும் நறிய
மாலையணிந்த அழகிய மார்பினையுடைய பிங்கல கடகர் என்க. மார்பழகர்
அல்லது ஆற்றலற்றவர் என்றிகழ்ந்தவாறு. 119. பெற்றி -தன்மை; ஈண்டுக்
கடமை என்க. 121, மாண் கோசம்பி - மாட்சிமையுடைய
கோசம்பி நகரம் வௌவியதும் - கைப்பற்றியதும்.
122. நீத்தம் - வெள்ளம். இது காமப் பெருக்கத்திற்கு உவமை.
123, புணை - தெப்பம். இது வாசவதத்தைக்குவமை. 124.
நின்னைப் பெற்றதாகிய அவ்வொரு சிறப்போடு என்க, நெடுநகர் என்றது
உவளகத்தை; (அந்தப் புரத்தை). புகல என்னும் எச்சத்தைப்
புகன்று எனத் திரித்துக் கொள்க. புகன்று - விரும்பி. 125.
முகைப்பூண் மார்பன் முற்படத் தோன்றிய தற்படுதுயரம் தன் மனத்து அணையான்
என மாறுக. முகை - மலர், மார்வன் ;
உதயணகுமரன், 126. தனக்குண்டாகிய துயரம் என்க. துயரம்
என்றது, காரணத்தைக் காரியமாகக் கூறியபடியாம்,
127. மட்.டு - தேன். கோதாய் ; விளி.
|
|