|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 17. தேவியைப் பிரித்தது | | விம்முறு
நிலைமை நோக்கித் துன்னிய
உறுதி வேண்டும் யூகி
மற்றிவன் இறுதி
செப்பி இவண்வந் தோனெனத்
தாய்தெரிந் துரைப்பச் சேயிழை
தேறி
| | (சாங்கியத்தாய்
வாசவதத்தைக்கு இவன் யூகி என்று
உணர்த்துதல்)
156 -159 . விம்முறு.......தேறி
| | (பொழிப்புரை) இவ்
வண்ணம் வாசவதத்தை ஐயுற்றுத் துன்பமுறா நின்ற நிலைமையினை அறிந்த
சாங்கியத்தாய் 'அன்னாய்! நின்னை எய்திய இவன் நுங்கட்கு எப்பொழுதும்
ஆக்கத்தையே விரும்பா நின்ற யூகி என்னும் அமைச்சனே ஆவன்; நுமக்கு நலஞ்
செயற் பொருட்டுத் தனது பொய்ச் சாவினை உலகுக்குக் காட்டி இவ்விடத்தே
தோன்றினான்' எனத்தெரியும்படி கூறா நிற்ப, அதுகேட்ட வாசவதத்தையும்
ஐயந் தெளிந்தவளாய் என்க.
| | (விளக்கம்) 156
-7.விம்முறு நிலைமை துன்னிய இவன் (நுங்கட்கு) உறுதிவேண்டும் யூகியே என
இயைக்க, உறுதிவேண்டும் - ஆக்கத்தையே விரும்புகின்ற, அவ்வாக்கத்தின்
பொருட்டே தனது மாய இறுதியை உலகிற்குக்காட்டி இவ்விடத்தே வந்தான்
என விரித்து ஓதுக, 158. இறுதி - சாக்காடு.
செப்பி என்றது, காட்டி என்னும் பொருட்டு, இவண் - இவ்விடத்தே, வந்தோன்
என்புழி ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தது
செய்யுளாகலின். 159. தெரிந்துரைப்ப என்புழித் தெரிந்து
என்னும் எச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
|
|