உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
17. தேவியைப் பிரித்தது |
|
நேர்ந்த
மாதரை நெடுந்தகைக்
குருசில்
பெயர்ந்த காலைப் பிழைப்பிலன் ஆகுதல்
அறியு மாத்திர மவ்வழி
அமைத்துச் 195 செறியத் செய்த
செவியுந் தானும்
மறுதர வுடைய மாயச் சூழ்ச்சி
உறுதியொ டொளித்தனர் உள்ளியது
முடித்தென்.
|
|
192 - 197 ;
நேர்ந்த..............முடித்தென்
|
|
(பொழிப்புரை) இவ்வண்ணம்
உடம்பட்ட வாசவதத்தைக்குக் குருசில் காட்டினின்றும் மீண்டகாலத்தே அவன்
தீங்கிலன் ஆதலை அறிவித்தற்பொருட்டு அதுகாறும் அவ்விடத்தேயே ஒரு
மறைவிடம் அமைத்துக்கொண்டு அவ்வியூகியும் செவிலித் தாயும்
அவ்வாசவதத்தையுடனே, அப்பொய்யாகிய சூழ்ச்சிக்குப் பொருந்தத் தாம்
எண்ணிய காரியத்தை முடித்துக்கொண்டு மறைந்து உறைவாராயினர்
என்க.
|
|
(விளக்கம்) 192.
இவ்வாற்றால் உடம்பட்ட வாசவதத்தைக்கு என்க, மாதரை என்புழி இரண்டனுருபு
நான்காவதன்கண் மயங்கிற்று. நீண்ட புகழையுடைய தலைவனாகிய உதயகணன்
கானத்தினின்றும் மீண்டகாலத்தே தீங்கிலனாய் உயிரோடிடுத்தலை
அறிவிக்கும் பொருட்டு என்க. அங்ஙனம் அறிவியாதுவிடின் வாசவதத்தை
தேறுதலரிதாகலின் அங்ஙனம் செய்தனர் என்க. அறியும் ;
அறிவிக்கும் எனப் பிறவினையாக்குக. 196. மறுதரவு - மீட்சி,
மீட்சியைத் தன்பாலுடைய குழ்ச்சித் துணிவோடே உள்ளியது முடித்து ஒளித்தனர்
என்க, உள்ளியதுப் கருதிய செயல். அ.ஃதாவது உதயணனிடமிருந்து
வாசவதத்தையை -
பிரித்தல்.
17, தேவியைப் பிரித்தது
முற்றிற்று
----------------------------
|