|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 18.  கோயில் வேவு |  |  |  | உலாவேட் டெழுந்த உதயண குமரன் 5    
      குழையணி காதிற் குளிர்மதி 
      முகத்திக்குத்
 தழையுந் தாருங் கண்ணியும் 
      பிணையலும்
 விழைபவை 
      பிறவும் வேண்டுவ 
      கொண்டு
 கவவிற் 
      கமைந்த காமக் 
      கனலி
 அவவுறு 
      நெஞ்சத் தகல்விடத் தழற்றத்
 10    
      தனிக்கன் றுள்ளிய புனிற்றாப் 
      போல
 விரைவிற் 
      செல்லும் விருப்பினன் ஆகி
 |  |  |  | (கானஞ் சென்ற உதயணகுமரன் மீண்டு 
      வருதல்) 1 - 11 : 
      உள்ளியது,,,.,,விரும்பினனாகி,
 |  |  |  | (பொழிப்புரை)  தாங் கருதிய 
      செயலைச் செய்து முடித்த   யூகியும், சாங்கியத்தாயும், வாசவதத்தையோடு 
      மறைந்த  பின்னர்ப்   பலா மரங்கள் செறிந்த பயன்மிக்க 
      மலைச்சாரலின்கண்  உலாவுதலை   விரும்பிச் சென்ற உதயணகுமரன், 
      வாசவதத்தைக்குத் தளிரும் தாருங்   கண்ணியும் பிணையலும் 
      இன்னோரன்ன   பிறவுமாகிய அவள்   விரும்புவனவத்றைக் 
      கைக்கொண்டு பிரிவு நேர்ந்த அவ்விடத்தே   பெரிதும் காமத்தீச் சுடா 
      நிற்றலால், தனது தலைக்கன்றினை நினைந்து   செல்லும் ஈன்றணிமையுடைய ஆன் 
      போல விரைந்து செல்லும்   விருப்பமுடையனாகி என்க, |  |  |  | (விளக்கம்)  1. உள்ளியது-கருதியசெயல். செவிலி ; சாங்கியத்தாய், 2. 
      ஒள்ளிழை மாதர் -ஒள்ளிய அணிகலன்களையுடைய
 வாசவதத்தை.
 3. பலா மரங்கள் நெருங்கியதும் நீரூற்றுகளை யுடையதும்
 பயன் 
      தருவதுமாகிய மலைச்சாரலின்கண் என்க.
 அமலுதல் - நெருங்குதல்; மிகுதலுமாம். 
      "பலாவமல் அடுக்கம்"
 (8) என்றார் அகத்தினும். அசும்பு - நீரூற்று,
 பயம் - பயன், மணி முதலியன படுதலும்' தேன் கனி
 முதலியன 
      உண்டாதலும் பிறவும் என்க.இனி மிளகுகோட்டம்
 அகில் தக்கோலம் குங்குமம் 
      என்பனவுமாம்.
 4, உலா-உலாவுதல். 
      வேட்டு-விரும்பி.
 5-7. குழையணிந்த செவியினையும்,குளிர்ந்த 
      திங்கள்   மண்டிலம் போன்ற முகத்தினையும் உடைய வாசவதத்தைக்கு   
      என்க. தழை முதலியனவும் பிறவுமாகிய அவள் விரும்புவனவற்றைக்  
      கைக்கொண்டென்க. தழை - தளிர். தார் - மார்பிலணியும்    மலர் 
      மாலை . கண்ணி - தலையிற் சூடும் மாலை. பிணையல் - ஒருவகை மாலை.  
      வேண்டுவ - வேண்டுமளவினவாக என்க,
 8. தழுவுங்கால் வெப்பம் 
      நீங்குமியல்புடைய காமத் தீ என்க,
 9, அகல்விடத்து - 
      பிரிந்த விடத்தே, அவவு - அவா
 ; குறியதன் கீழ் ஆகாரம் குறுகி உகரம் 
      ஏற்றது.
 ''கவவிற்கு அமைந்த காமக்கனலி அகல்விடத்து 
      அழற்ற.' என
 வரும். இதனுடன்,
 ''நீங்கின் தெறூஉங் குறுகுந் கால் 
      தண்ணென்னுந்
 தீயாண்டுப் பெற்றாள் இவள்''        (குதள் 
      -1104)
 எனவரும்அருமைத் திருக்குறளையும் நினைக.
 அழற்ற-சுடாநிற்ப.
 10-11. தனிக்கன்று - தலைக்கன்று; (முதன் 
      முதலீன்ற கன்று)
 புனிற்றா - ஈன்றணிமையுடைய ஆ.ஆ விரைவிற் செல்லுமாறு
 போல விரைவிற் செல்லும் விருப்பினன் என்க
 | 
 |