| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 18.  கோயில் வேவு | 
|  | 
| வல்லே
 60   மாய மள்ளரை ஆயமொ 
      டோட்டி
 உருமண் 
      ணுவாவும் வயந்தக 
      குமரனும்
 பொருமுரண் 
      அண்ணல் புகுதரும் 
      வாயிலுள்
 பொச்சாப் போம்புதல் புரிந்தனர் நிற்ப
 | 
|  | 
| 59 - 63 : 
      வல்லே.........நிற்ப | 
|  | 
| (பொழிப்புரை)  பொய்மையையுடைய 
      பகைமறவரைக்   கூட்டத்தோடே ஓடும்படி அவருடன் பொய்ப்போர்   
      புரிந்து உருமண்ணுவாவும் வயந்தக குமரனும் அண்ணல்   வந்து புகுதற்குரிய 
      வாயிலினிடத்தே அவன் புகுங்கால்   உண்டாகும் சோர்வினைத் தவிர்த்து அவனை 
      உய்யக்கோடல்   செய்வாராய் விரைந்துவந்து நிற்ப 
  என்க, | 
|  | 
| (விளக்கம்)  56. வல்லே - விரைந்து 6o,மாய மள்ளர் - பொய்யாகப் பகைவர் போல வந்து அரண்மலையில் தீக்கொளுவிய மறவர்.  ஆயம் - கூட்டம்,
 62. பொருமுரண் - போர்செய்யும் வலிமை. அண்ணல் ;  உதயணகுமரன்.   புகும்பொழுது அவ்வாயிலின்கண் துனப   மிகுதியாலே தீயினுட்புகுதலும் கூடும் அன்றே!   அத்தகைய பொச்சாப்பு   நேராதபடிபாது காவல் செய்தனராய் நிற்ப என்க.
 63, பொச்சாப்பு - ஈண்டுத் துன்பமிகுதியால் உண்டாகும்  சோர்வு.
 |