|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 19. தேவிக்கு விலாவித்தது | |
60 மணியு முத்து மணியு
மிழந்துதிர்ந்
தாரக் கம்மஞ் சாரவீற்
றிருந்து கொள்கைக்
கட்டழல் உள்ளுற
மூட்டி மாசுவினை
கழித்த மாதவர்
போலத் தீயகத்
திலங்கித் திறல்விடு கதிரொளி 65 சேடுறக்
கிடந்த செம்பொன்
செய்கலம்
பொன்னணி மார்பன் முன்னண விடுதலின
| | 60 - 66 ;
மணியும்........முன்னண
விடுதலின்
| | (பொழிப்புரை) பின்னர்த்
தம்பாலமைந்த மணிகளையும் முத்துக்களையும். இழந்து உதிர்ந்த
வடங்களின் பக்கலிலே அழுக்காகிய இருவினைகளையும் கழித்துவிட்ட
மாதவர்போலத் தீயினூடே கிடந்து விளங்கித் திறலோடே வீசாநின்ற ஒளி
அழ குறக் கிடந்த செம்பொன்னாலியன்ற அணிகலன்களை உதயணன்
பக்கலிலே கொணர்ந்து இட்டமையானே, என்க.
| | (விளக்கம்) 60
- 65. .இதனுள் துன்பஞ் சுடச்சுட நோற்றலாலே தம் இருவினையாகிய
குற்றத்தைக் கழித்த துறவியர், தீயினுட் கிடந்து அது சுடுதலானே தம்பாற்
பதித்த முத்து முதலியன கழியப்பெற்று மாசு நீங்கி மிக்கொளிரும்
பொன்னணிகலன்கட்கு உவமை 60, மணி என்றது,
முத்தொழிந்த மணிகளை- அணி-அழகு. 61. ஆரமாகிய கம்மம். ஆரம்
-வடம். கம்மம் ; ஆகுபெயரான் அணிகலனைக் குறித்து
நின்றது 62, கொள்கை-அவாவறுத்தற் கருத்து. அக் கருத்து
அவரைத் துன்புறுத்துதலின் தீயை உவமை எடுத்துக்
கூறினார். 63. மாசுண்டாக்கும் இருவினைகளையும் என்க. , மாசு
ஆகு
பெயராற் பிறப்பினைக் குறித்து நின்றது. 'இருள்சேர் இருவினை'
என்றார் வள்ளுவனாரும். இதனோடு,
'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்
துன்பஞ் சுடச்சுட
நோற்கிற் பவர்க்கு' எனவரும் திருக்குறளையும்
நினைக. 65. சேடு-அழகு. செம்பொன்னாற் செய்த அணிகலன் என்க.
66, மார்பன் ; உதயணன். அண இடுதலின்-அணுக இடுதலானே
என்க.
|
|