|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 19. தேவிக்கு விலாவித்தது | | ஓங்குவரை மருங்கின் ஒளிபெற நிவந்த
130 காம்பொசிந் தன்ன கவினை யாகிய
நலங்கிளர் தடந்தோள் நவையறச்
சேஎந் தலங்குமலர்த்
தாமரை அகவயின் அமர்ந்த
திருமகள் இருக்கை உருவுபடக் குயிலாக்
காமுறப் புனைந்த தாமம் உளப்படப்
135 பொறிவரி ஒழுக்கம் போலு
மற்றிம் மறியிலைக்
கம்மமொடு மகரங் கவ்விக்
கொடியொடு துளங்கி அடிபெற
வகுத்த அருமணிக் கடகமொ
டங்குலி யழியச் செற்றுபு
சிறந்த சிறப்புமுள் ளாது 140 கற்றதென்
அமர்ந்த கலப்பின வாகியும்
பற்றுவிட் டகறல் பண்போ எனவும்
| | 129 - 141; ஓங்கு...,.,....பண்போ
எனவும்
| | (பொழிப்புரை) உயாந்த
மலைப்பக்கத்தே ஒளியுண்டாக வளர்ந்த மூங்கில் அசைந்தாற் போன்ற
அழகுடையையாகிய நலமிக்க பெரிய தோளே ! குற்றந்தீரச் சிவந்து
அசையா நின்று தாமரை மலரினகத்தே வீற்றிருந்த திருமகளினது வடிவம்
உண்டாக இயற்றிக் கண்டோர் விரும்பும்படி நின்னை ஒப்பனை
செய்யப்பட்ட இம்மாலையுடனே புள்ளியையுடைய வண்டுகளினது நிரல்
போன்ற மடங்கிய இலைத் தொழிலையுடைய இம்மணிமாலை யும் மகரமீனால்
கவ்வப்பட்ட பூங்கொடியுருவம் உண்டாக இயற்றப் பட்ட அரிய மணிகள்
பதித்த இக்கடகமும் மோதிரங்களும் இங்ஙனம் அழிந்துகெட இவற்றைச் சினந்து
நினக்கும் அழகு தருவனவாகச் சிறந்த இவற்றின் சிறப்பினையும் கருதிப்பாரா
மல், இவை நின்னோடு பெரிதும் நட்புடையன ஆகியிருந்தும், இவற்றின்பாற்
பற்றுவிட்டு அகன்றொழிதல் நினக்குத் தகவாகுமோ? நீ தான் கற்றது
பிறிதியாதோ கூறுக ! என்றும் என்க.
| | (விளக்கம்) தடந்தோள்,!
இத்தாம முதலியன அழிய இவற்றின் சிறப்பும் உள்ளாது இவை நின்னோடு
கலப்பின வாகியும் அகறல் பண்போ நீ கற்றதுதான் என்? என
இயைத்துக் கொள்க. 130. காம்பு-மூங்கில்.
கவினை-அழகுடையை. 131. தடந்தோள் ; விளி.
நவை-குற்றம்,சேஎந்து-சிவந்து. 132, அலங்கு தாமரைமலர் அகவயின் என
மாறுக. 133-134. திருமகளிருக்கை வடிவமாக இயற்றிப் புனைந்த இத்
தாமம் என்க, குயிலா -இயற்றி 135. வண்டொழுங்கு
போன்று மணிகளை நிரல்படப் பதித்து இடையிடையே மடங்கிய இலையுருவம்பட
இயற்றிய மாலை என்க கம்மம் ; ஆகுபெயர்; அணிகலன் என்க.
136-138. மகரம் - மகரமீனாற் கவ்வப்பட்ட கொடியுருவத்தில்
அமைக்கப்பட்ட மணிக்கடகம் என்க. அங்குலி-மோதிரம். 139,
செற்றுபு -செற்று; சினந்ெ.தன்க. நட்டாரைக் கைவிடுதல் கற்றோர்
செய்யத்தகாத செயலாகின் நீ கற்றதென் என்றான். கற்றதென் என்னும்
வினா நீ கற்றிலை என்பதுபட நின்றது. 141. பண்பு -தகவுடைமையைக்
குறித்து நின்றது, பண்போ என்புழி ஓகாரம் எதிர்மறை. பண்பன்று
என்றவாறு.
|
|