உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
19. தேவிக்கு விலாவித்தது |
|
பவழக் காசொடு பன்மணி விரைஇத்
திகழக் கோத்த செம்பொற்
பாண்டில் கைவினைக்
கொளுவிற் செய்துநலங் குயின்ற 145 எண்ணாற்
காழ்நிரை கண்ணுமிழ்ந் திலங்க
உருவக் கோலமொ டுட்குவீற்
றிருந்த அரவுப்பை அன்ன
ஐதேந் தல்குல்
புகைக்கொடிப் புத்தேள் பொருக்கென ஊட்டி
அழற்கொடி அரத்தம் மறைத்தவோ எனவும்
|
|
142 - 149 :
பவழ.........மறைத்தவோ
எனவும்
|
|
(பொழிப்புரை) பவழமணியோடு பிற
மணிகளையும் விரவித் திகழும் படி கோத்த செம்பொன் பாண்டிலும்,
தொழிற் றிறனுடைய பொருத்துவாய்களுடனே செய்து அழகுமிகு
மேகலையணியும் காண்போர் கண்கூச ஒளிவீச விளங்கா நிறபச் செய்த அழகிய
ஒப்பனையோடு பாம்பின் படத்தை ஒத்த மெல்லிதாய் உயர்ந்த
அல்குலினைத் தீப்பிழம்புகளாகிய சிவந்த ஆடைகள் தீக்கடவுக்கு ஊட்டி
மறைத்தழித்தனவோ என்றும், என்க.
|
|
(விளக்கம்) 142. காசு ; மணிப்பொதுப்பெயர். விரைஇ-விரவி 143,
பாண்டில் - வட்டவடிவமான பொற்காசுமாலை. 144, கொளுவு -
பொருத்துவாய். 145. எண்ணாற் காழ்நிரை - விரிசிகை என்னும்
ஒருவகை மேகலை அணி. 146. உட்கு-
அச்சம்; அச்சம் வீற்றிருத்தற்கு இடமான அரவு என்க,
147. பை-படம். ஐது-மெல்லிதாக. 148. புகைக் கொடிப் புத்தேள் -
தீக்கடவுள். 149, அழற்கொடி அரத்தம்-தீம்பிழம்புகளாகிய நெடிய
ஆடை என்க. பட்டாடை முதலியவற்றால் மறைத்தத்குரிய
மெல்லிய அல்குலைத் தீப்பிழம்பாகிய செவ்வாடைகள் மறைத்தனவோ
என்றிரங்கிய படியாம். அரத்தம்- செவ்வாடை.
|