உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
         
    150    மணிக்கண் அன்னம் அணித்தகு பெடையைப்
          பயிலிதழ்ப் பனிநீர்ப் பக்க நீக்கி
          வெயில்கெழு வெள்ளிடை விட்டிசி னாங்கு
          மணியரிக் கிண்கிணி சிலம்பொடு மிழற்ற
          நின்னணி காண்கஞ் சிறிது சிறிதுலாஅய்
    155    மராஅந் துணரு மாவின் தழையும்
          குராஅம் பாவையுங் கொங்கவிழ் முல்லையும்
          பிண்டித் தளிரும் பிறவும் இன்னவை
          கொண்டியான் வந்தேன் கொள்குவை யாயின்
          வண்டிமிர் கோதாய் வாரா யெனயும்
 
        150 - 159 : மணி............வாராயெனவும்
 
(பொழிப்புரை) மணிபோன்ற ஒளியுடைய கண்களையுடைய அன்னச் சேவல் தன் பெடையை நற்றாமரைக் குளத்துக் குளிர்ந்ந நீரினின்றும் அகற்றி வெப்பமிக்க பாலைநிலத்திலே விட்டாற்போன்று நின்னை இத்தீயிடை விட்டேம் என் செய் கோம் யாம்!, ,.,,,,,,,,,,,,,,,,வாசவதத்தாய்,! நினது அழகினைக் காண்பேம்! வண்டுகள் இசையாநின்ற மலர்மாலையினையுடை யோய்! யாம் நின் பொருட்டுக் காட்டினின்றும் மராஅம் பூங் கொத்தும் மாந்தளிரும். குரவும்பூவும் தேன்பிலிற்றும் .முல்லைப் பூவும் அசோகந்தளிரும் இன்னோரன்ன பிறவும் கொண்டு வந் துள்ளேம்; இவற்றை ஏற்றுக்கொள்வாயாயின் மாணிக்கப்பரலிடப் பட்ட கிண்கிணியும் சிலம்பும் ஒலிப்ப மெல்ல மெல்ல நடந்து எம்முன் வருவாயாக நினக்கு இவற்றை அணிந்து நின்னழகினை யாமும நுகர்வேம் காண் என்றும் என்க.
 
(விளக்கம்) 150, அணித்தகு பெடையை-அழகுத் தகுதியையுடைய தன் பெடையன்னத்தை என்க,    மணிக்கண் அன்னம் ; உதயணன் தனக்குத்தானே எடுத்துக்கூ.றிய உவமை. பெடையன்னம் ; வாசவதத்தைக்கு உவமை.
    151. பயிலிதழ் ; அன்மொழித்தொகை, தாமரைமலர் என்க.
    152. வெயில் கெழுவெள்ளிடை என்றது பாலை நிலத்தை.   விட்டிசினாங்கு-விட்டாற்போன்று.
    153. மணியரி- மாணிக்கப்பரல். மிழற்ற-ஒலிப்ப.......................  ஈண்டு ஓர் அடிமுழுதும் காணப்பட்டிலது
    153, காண்கம் - காண்பேம் ; ஒருமைப் பன்மை மயக்கம்.
    155. மராஅம் பூங்கொத்தும் என்க.
    156. குராஅம் பாவை - குரவமலர்.
    157. பிண்டித்தளிர் - அசோகந்தளிர்,