|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 19. தேவிக்கு விலாவித்தது | | 160
அணிவரைச் சாரல் அருவி யாடியும்
பணிமலர் கொய்தும் பாவை
புனைந்தும் திருவிழை
மகளிரோ டொருவழி வருவோய்
மருவின் மாதவன் மாசின்
மடமகள் விரிசிகை வேண்ட
வேறுபடு வனப்பின் 165 தாமந் தொடுத்தியான்
கொடுத்தது தவறெனக் காம
வேகங் கடுத்த கலப்பிடை
முகத்தே வந்தோர் முசுக்கலை தோன்ற
அகத்தே நடுங்கி அழற்பட
வெய்துயிர்த் தஞ்சி
அடைந்த அஞ்சில் தேமொழிப் 170 பஞ்சி
மெல்லடிப் பாவாய் பரந்த
கடுந்தீக் கஞ்சாது கரத்தியோ எனவும்
| | 160- 171 ; அணிவரை. ,.,...,கரந்தியோ
வெனவும்
| | (பொழிப்புரை) அழகிய மலைச்சாரலிலே
விளையாட்டயர்ந்தும் கைக் கெட்டும்படி தாழ்ந்த கிளைகளில் உள்ள மலர்களைக்
கொய்தும், பாவை புனைந்தும் திருமகளும் விரும்புதற்குக் காரணமான
அழகுடைய தோழியரோடு வாராநின்ற நீ பழகுதல் இனிய மாதவன் மகளாகிய
குற்றமற்ற விரிசிகை என்பாள் என்னை வேண்டிக்கோடலால் மாறுபட்ட அழகோடே
மலர்மாலை தொடுத்து. யாம் அவட்குக் கொடுத்தமையைக் கண்டு அங்ஙனம்
செய்தது தவறென்று கருதினையாய் ஊடிய அக்காமவேக மிக்க
ஊடற்பொழுதில் நின்கண் முன்னர் ஒரு கருங்குரங்கு வந்து. தோன்றிற்றாக,
அதனைக் கண்டு உள்ளத்தே நடுங்கி வெப்ப முண்டாக உயிர்த்து அஞ்சி
என்னைத் தழுவிக்கொண்ட .அழகிய. சிலவாகிய மொழிகளையுடையோய்! அலத்தக
மூட்டப்பட்ட மெல்லிய அடியையுடைய பாவையே! அத்தகையோய் பரவிய இக் கடிய
தீயினுக்கு அஞ்சாமல் அதனுட்புகுந்து மறைந்தனையோ என்றும் என்க.
| | (விளக்கம்) 160. அணிவரைச்சாரல்-அழகிய
மலைச்சாரல். 161. பணி மலர்-தாழ்ந்துள்ள மலர் என்க,
பாவை-விளையாட்டுப் பாவை. 162. திருவிழைதற்குக்
காரணமான அழகுடைய மகளிரொடு என்க.
ஒருவழி-ஒருங்கே 163.. மருவுதல் இனிய மாதவன் என்க
ஈண்டு, 'நவில்தொறும் நூனயம்
போலும்
பயில்தொறும் பண்புடை
யாளர் தொடர்பு'
(குறள்-783) என வரும் திருக்குறளை நினைக. 167,
முசுக்கலை-கருங்குரங்கில் ஆண். 167,, அழகிய சிலவாகிய இனிய
மொழிகளைப் பேசும் இயல்புடை யோய் என்க. 170,
பஞ்சி-அலத்தகம், 171. கரத்தியோ - மறைந்தனையோ.
|
|