|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 19. தேவிக்கு விலாவித்தது | | அங்கண் மாநிலத் தகன்றுயிர் வாழ்வோர்
வன்க ணாளர் என்றுபண்
டுரைப்போய் நின்கண்
அம்மொழி நிற்ப என்கண் 175 புன்கண்
நோக்காது போதியோ எனவும்
| | 172 -175 ; அங்கண்.......போதியோ
| | (பொழிப்புரை) ''இவ்வுலகத்தே
காதலரைப் பிரிந்து வாழும் இயல் புடையோர் வன்கண்மையுடையோரே ஆவர்''
என்று பண்டு நீயே கூறுவை, அவ்வசைமொழி நின்மேல் நிற்கும்படி
எம்பாற் றோன்றிய துன்பத்தையும் நோக்காயாய்ப் பிரிந்து போயினையோ!
என்றும் என்க,
| | (விளக்கம்) 172,
காதலரைப் பிரிந்து தனித்து வாழ்வோர் என்க. 174.
அம்மொழி -அவ்வசைமொழி. 175. புன்கண்-துன்பம்.
|
|