| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 20. சண்பையுள் ஒடுங்கியது | 
|  | 
| கண்நவை உறூஉங் கனிபல கண்டவை 10    நயவரு நஞ்செனப் பெயர்தெரி 
      வின்மையின்
 ஊழுறுத் தக்கனி தாழ்விலர் வாங்கித்
 துன்ப நீக்குந் தோற்றமு 
      மன்றி
 இன்ப 
      நாற்றமும் இனயந்தன இவையென
 நச்சுபு தெரிந்த நாற்றமுஞ் 
      சுவையும்
 15    ஒப்புமை இன்மையின் 
      உயிர்முதல் தாங்க
 அமரர் காட்டிய அமுதுநமக் கிவையெனப்
 பசிநோய் தீர அயிறலிற் கதுமெனத
 | 
|  | 
| 9 
      - 17 ; அவை....................அயிறலின் | 
|  | 
| (பொழிப்புரை)  அக்கனிகள் 
      நயத்தல் வருதற்குக் காரணமான வஞ்சமுடைய நச்சுக் கனிகள் என்பதும், 
      அவற்றின் பெயர்
 இவை என்பதும் தெரியாமையானே அவற்றை வீழ்த்திக்காலந்
 தாழ்த்தாமற் கைக்கொண்டு நோக்கி இவை தமது தோற்றத்தானே
 நமது பசித் துன்பத்தை நீக்கு மியல்பின வாதலோடு இன்பமும்
 நறுமணமும் 
      பொருந்தியுள்ளன என்று அவற்றைப் பெரிதும் விரும்பி
 மணத்தானும் சுவையானும் 
      இவை நிகரற்றன ஆதலின் இவை நமக்கு
 அருள் செய்யக் கருதிய தேவர்கள் நாம் 
      நம்முயிரை ஓம்புதற் பொருட்டுக்
 காட்டிய அமிழ்தமே ஆகும் என்று கருதித் தம் 
      பசிப்பினி யகலும்படி
 அவற்றை உண்ணா நிற்றலானே என்க,
 | 
|  | 
| (விளக்கம்)  10. நயவரு 
      - நயத்தல் வருதற்குக் காரணமான வஞ்சமுடைய என்க, நஞ்சென்றும் அவற்றின் 
      பெயரின்ன வென்பதும்   தெரியாமை யான் என்க,
 11. 
      ஊழுறுத்து - (ஊழுறுதல் - வீழ்தல் எனவே) வீழ்த்தி என்க, தாழ்விலர் ;  
      முற்றெச்சம். தோற்றமேயன்றி 12. இன்பமும் மணமும் உடையன என்று   மகிழ்ந்து 
      என்றவாறு.
 14. நாற்றத்தானும் சுவையானும் தமக்கு ஒப்பில்லாதன 
      என்க.
 17. அயிறலின் - உண்ணுதலானே, என்க.
 |