|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 20. சண்பையுள் ஒடுங்கியது |  |  |  | கதுமெனத் தசைபோழ்ந்து கழற்றித் தபுத்திசி 
      னாங்குத்
 தாமரைச் செங்கண் தகைமலி மார்ப
 20  
       காமத் தியற்கையுங் காணுங் காலை
 இறுதியில் இன்பமொ டினியது 
      போல
 உறுபயன் ஈனா உடம்புமுதல் தபுத்தலிற
 |  |  |  | 17 
      - 22 ; 
கதுமென.........................தபுத்தலின |  |  |  | (பொழிப்புரை)  அக் கனிகள் 
      விரைந்து அங்ஙனம்   உண்டவர்களின் தசைகளைப் பிளந்து கழற்றிக் 
      கொன்றொழித்தாற்   போன்று இக் காமத்திற்குக் காரணமான இவ்வுலகப் 
      பொருள்கள்   தாமும் தொடக்கத்தே அழிவில்லாத இன்பந்தருவன போன்றும் 
        இனியனபோன்றும் காட்டி அவற்றைக் கைப்பற்றி அப்பொருள்களின் 
        இயல்பறியாமல் நுகர்ந்தவருடைய பிறவிப்பயன் எய்தப் பெறாத உடம்பினை 
        அழித்துவிடும் இயல்புடையன  ஆதலான் பெரியோர், இக்காம நுகர்ச்சிப் 
        பொருளே பெறக் கடவதாகிய பயன் என்று கருதுவதிலர் என்றார் 
      என்க., |  |  |  | (விளக்கம்)  17. 
      கதுமென ; விரைவினைக் காட்டுவதொரு
      குறிப்புச்சொல். 18, தபுத்திசினாங்கு - 
      கொன்றொழித்தாற்போன்று.
 19, தகை - அழகு. மார்ப ; 
      விளி.
 21, இறுதியிலின்பம் - முடிவில்லாத 
      இன்பம்.
 22, பிறவிப்பயனை விளைவியாத இவ்வுடம்பினையும் 
      என்க. உடம்பு முதலும் என வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தாற் 
      றொக்கது,
 | 
 |