உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
20. சண்பையுள் ஒடுங்கியது |
|
40 வேண்டிய அளவிற்
காண்தகக் கூட்டிக்
கரந்துநிறம் எய்தும் அரும்பெறல் யோகம்
யாவரும் அறியாத் தன்மைத்
தாக மூவரும் உண்டு
வேறுநிறம் எய்தி அந்தண
வுருவொடு சந்தனச் சாரல் 45 பெருவரை
அடுக்கத் தருமைத் தாகிய
கல்சூழ் புல்லதர் மெல்லடி யொதுங்கிப
|
|
40 - 46 ;
வேண்டிய.............ஒதுங்கி
|
|
(பொழிப்புரை) அங்கொருசார்
இருந்து சரக்குகளை வேண்டுமளவிற கூட்டிச் செய்ததும் உண்போர் உருவம் மாறி
வேற்று நிறம் எய்துதற்குக் காரணமானதும் பெறற்கரிய துமாகியதொரு கூட்டு
மருந்தினைத் தம்முருவம் பிறர் யாரும் அறிந்து கொள்ளப்படாத வாதற்பொருட்டு
அம் மூவரும் உண்டு நிறம் மாறிப்பார்ப்பன வடிவத்தோடு சந்தன மரங்கள்
மிக்க சாரலையுடைய பெரிய மலை நிலத்திலே நடந்து செல்லுதற்கு
அரியதாகிய கல்லும் புல்லும் சூழ்ந்ததொரு வழியின்மேல் நடந்து
(செல்லா நிற்கும் பொழுது) என்க.
|
|
(விளக்கம்) 40 - 1.
கூட்டிச் செய்த யோகம் என்க. உண்டோர் நிறம்
மறைந்து வேறு நிறம் பெறுதற்குக் காரணமான யோகம், அரும்பெறல் யோகம்
எனத் தனித்தனி கூட்டுக. 42, தம்முருவம் தம்மை முன்பு தெரிந்துள்ளோர்
யாவரும் தெரிந்து கொள்ளமாட்டாத தன்மையுடையனவாதற்
பொருட்டென்க, 44, சந்தன மரங்கள் மிக்க சாரல்
என்க. 45. செல்லுதற்கு அருமைத்தாகிய
என்க. 46. புல்லதர் - புல்லியவழி எனினுமாம், புலவர் அவருள்
வாசவதத்தையை நினைந்தவராய் 'மெல்லடி' என்றார்.
|