உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
20. சண்பையுள் ஒடுங்கியது |
|
மற்றதன் அகவயின் தெற்றெனத்
தெரியும் உருமண் ணுவாவின்
பெருமுது குரவன் அவமில்
சூழ்ச்சித் தவமுது மகனொடு 70
கருமங் கூறிக் கண்ணுற்றுப்
பிரியார்
அணித்துஞ் சேய்த்தும் அன்றி அமைவுற
மணிப்பூண் மாதரு மனம்புரி
தோழனும் காதற்
செவிலியுங் கரந்தவண் ஒடுங்கி
மாதவர்த் தெரீஇ மரீஇ யொழுகப்
|
|
[ யூகி
முதலியோர் அத் தவப்பள்ளியில் உறைத்தல்
] 67
- 74 : மற்றதன்..................மரீஇயொழுக
|
|
(பொழிப்புரை) அத்
தவப்பள்ளியின்கண் யூகியால் நன்கு அறியப்பட்டவரும் உருமண்ணுவாவினுடைய
தந்தையும் அவமில்லாத முயற்சியாகிய தவத்தையுடையவரும் முதியவருமாகிய
ஒரு முனிவரைக் கண்டு அவர்பால் தமது வரலாற்றினைக் கூறி
அத்தவப் பள்ளியினின்றும் பிரியாராகவும் அவருள் யூகி வாசவதத்தையினை
அகலாதும் அணுகாதும் ஒழுகி ஏனைச் செவிலித்தாயோடும் அவ்விடத்திலேயே எனை
முனிவர்களையும் அறிந்து
|
|
(விளக்கம்) 67.
தெற்றெனத் தெரியும் என்பதற்கு, மெய்ப் பொருளைத் தெள்ளத்தெளிய உணரும்
முனிவன் எனினுமாம் 68, பெருமுதுகுரவன் ;
தந்தை. 69. அவமில் சூழ்ச்சித் தவமுதுமகன் என்னுமித்
தொடரோடு, ''தவஞ்செய்வார் தங்கருமஞ்
செய்வார்மற் றல்லார அவஞ்செய்வார்ஆசையுட் பட்டு'' (குறள் - 266) என வரும் திருக்குறளையும்
நினைக. 70. கருமம் - தாங்கருதியுள்ள
செயல். 73, மாதர் ; வாசவதத்தை,
74, தெரீஇ - தெரிந்து. மரீஇ - மருவி; பழகி,
|