|
325. | இன் தளிர்க் கற்பகம் நறும் தேன் |
இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து |
நின் தளிக்கும் தனிக் குடையின் |
நிழல் ஒதுங்கிக், குறை இரந்து நிற்ப, நோக்கிக் |
குன்று அளிக்கும் குலம் மணித் தோள் சம்பரனைக் |
குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு, |
அன்று அளித்த, அரசு அன்றோ புரந்தரன் இன்று |
ஆள்கின்றது; அரச! என்றான். |
|